×

நாங்குநேரி பகுதியில் வீடுபுகுந்து துணிகரம் ஆடுகளை திருடி நள்ளிரவில் கறி விருந்து

நாங்குநேரி,  மே 14:   நெல்லை மாவட்டம், நாங்குநேரி மற்றும் சுற்று வட்டாரத்தில் கடந்த சில மாதங்களாக வீடுகளில் வளர்க்கப்படும் ஆடுகளை மர்ம கும்பல் மாலையில் நோட்டமிட்டு இரவில் திருடிச்சென்று நள்ளிரவில் கறி விருந்து நடத்துவதாக புகார்கள் எழுந்துள்ளன. குறிப்பாக வீடுபுகுந்து திருடும் ஆடுகளை இரவு நேரங்களில் அங்குள்ள காடுகளிலும் விவசாய பம்ப்  செட்டுகளிலும் வைத்து சமைத்து கூட்டமாக சேர்ந்து மதுவுடன் பார்ட்டி  கொண்டாட்டம்  நடத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து புகார்  அளித்தால் சம்பந்தபட்ட காவல் நிலையங்களில் முறையான நடவடிக்கை எடுப்பதில்லை  எனவும் ஆடு வளர்ப்போர் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்நிலையில் நாங்குநேரியை  அடுத்த பட்டப்பிள்ளைபுதூரைச் சேர்ந்த வானமாமலை (39) வளர்த்துவந்த 3  ஆடுகளை வீடு புகுந்து மர்ம நபர்கள் திருடி சென்றனர். அவற்றின் மதிப்பு  சுமார் ரூ.30ஆயிரம் ஆகும். புகாரின் பேரில் நாங்குநேரி  போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார். எனவே, இனியாவது இரவு நேரத்தில் போலீஸார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு ஆடு திருடும் கும்பல் மீது கடும்  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பு.

Tags : area ,Nanguneri ,
× RELATED சொத்தை எழுதி வைக்க மறுத்ததால்...