கல்லூரி மாணவர்களுக்கு கோடை கால பயிற்சி முகாம்

திருப்பூர்,  மே 14: திருப்பூரில் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொது வாசகர்களுக்கான  கவிதை, சிறுகதை எழுதுவது தொடர்பாக கோடை கால பயிற்சி முகாம் நேற்று  முன்தினம் நடைபெற்றது. இந்த முகாமுக்கு தமிழ்நாடு கலை இலக்கியப்  பெருமன்றத்தின் மாவட்டச் செயலாளர் நடராஜன் தலைமை வகித்தார். இதில்,  எழுத்தாளர் முருகவேல் கலந்துகொண்டு பேசியதாவது: உலகமயமாக்கலுக்கு  முன்பு பொதுமக்கள்  ஒன்றுகூட சந்தர்ப்பங்கள்  இருந்தன. சேர்ந்து  செயல்படுவது, சிந்திப்பது என்பது வழக்கமாக இருந்தது. அப்போதைய கால கட்டத்தில்  எழுத்துக்களில் ஓரளவு சமூக வாழ்க்கை இருந்தது. உலகமயமாக்கல் காலத்தில்  சமூகத்தில்  தனிநபர் சார்ந்த கோபம், உணர்வு, தனிமை பற்றிய படைப்புகள்  வந்தன.இப்போது மீண்டும் பழையபடி சமுதாயம் சார்ந்து வாழ்க்கை மாற்றம்  குறித்த இலக்கியங்கள் வருகின்றன என்றார். இந்த முகாமில், எழுத்தாளர்  சுப்ரபாரதிமணியன் மற்றும் கலை இலக்கியப்பெருமன்ற நிர்வாகிகள், கல்லூரி  மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

× RELATED விதை விற்பனையாளர்களுக்கு சிறப்பு பயிற்சி முகாம்