×

மு.க.ஸ்டாலின்-சந்திரசேகர ராவ் சந்திப்பை வரவேற்கிறோம்

சூலூர், மே 14: மு.க.ஸ்டாலின்-சந்திரசேகர ராவ் சந்திப்பை வரவேற்கிறோம் என ஜி.ராமகிருஷ்ணன் கூறினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்  ஜி.ராமகிருஷ்ணன் சூலூரில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் வரும் 19ம்தேதி நடைபெற உள்ள 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக அணிதான் வெற்றிபெறும். இதன்மூலம், மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும். மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது ஏற்கனவே உறுதிசெய்யப்பட்டு விட்டது. புதுச்சேரியில், ைஹட்ரோகார்பன் திட்டத்தை நிறைவேற்ற, மத்திய அரசு, வேதாந்தா நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது. இந்நிறுவனம்தான் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு காரணமாக இருந்தது. இந்நிறுவனத்துக்கு ஆதரவு அளித்து, மக்களின் வாழ்வாதாரத்தை மத்திய அரசு பறிக்கிறது. இதற்கு, தமிழக அரசு உடந்தையாக உள்ளது.


 மு.க.ஸ்டாலின் - சந்திரசேகர ராவ் சந்திப்பால், தேசிய அளவில் 3வது அணி அமைய வாய்ப்புள்ளது. இதை, வரவேற்கிறோம். மக்களவை தேர்தல் முடிவுக்கு பிறகு மத்தியில் மதசார்பற்ற அரசு அமைவது தொடர்பான ஆலோசனை  நடைபெறலாம். இந்திய தேர்தல் ஆணையம், மத்திய-மாநில அரசுகளுக்கு ஆதரவாக செயல்படுகிறது. இது, கண்டிக்கத்தக்கது. அரசு திட்டங்கள் எதையும் அறிவிக்க கூடாது என தேர்தல் நடத்தை விதி  அமலில் இருக்கும்போது, மத்திய அரசு, ைஹட்ரோகார்பன் திட்ட அறிவிப்வை வெளியிட்டுள்ளது. இது, வன்மையாக  கண்டிக்கத்தக்கது. தமிழகத்தில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விடும் என்ற பயம், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்திற்கும் ஏற்பட்டுள்ளது. 22 சட்டமன்ற தொகுதிகளிலும் திமுக அணிதான் வெல்லும். இவ்வாறு ஜி.ராமகிருஷ்ணன் கூறினார்.

Tags : MK Stalin-Chandrasekara Rao Junction ,
× RELATED மு.க.ஸ்டாலின்-சந்திரசேகர ராவ் சந்திப்பை வரவேற்கிறோம்