×

கொடைக்கானலில் கேரள பலா விற்பனை அமோகம்

கொடைக்கானல், மே 14: கொடைக்கானலில் கேரள பலா பழங்கள் விற்பனை அமோகமாக உள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனர். மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் ஆரஞ்சு, ஆப்பிள், பிளம்ஸ், பலா, பேரிக்காய் உள்ளிட்ட பழங்கள் அதிகளவில் விளைகின்றன. தற்போது குளு, குளு சீசனையொட்டி சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருப்பதால் பழங்களின் விற்பனையும் அமோகமாக நடந்து வருகிறது. இங்கு விளையும் பலா பழம் மட்டுமின்றி கேரளாவிலும் இருந்தும் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. தற்போது கேரள பலா பழங்கள் ஒரு கிலோ ரூ.30 வீதம் என ஒரு பழம் சுமார் ரூ.200 முதல் ரூ.250 வரை விற்பனையாகிறது.

இதுகுறித்து பலா பழ வியாபாரிகள் கூறுகையில், ‘கொடைக்கானலில் பலா பழ சீசன் துவங்க இன்னும் தாமதமாகும். தற்போது குளு, குளு சீசன் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். இதற்காக கேரள பகுதிகளில் இருந்து பலா பழங்களை வாங்கி விற்கிறோம். கொடைக்கானல் பலா பழத்தை விட கேரள பலா பழங்கள் நல்ல ருசியாகவும், மிக அழகாக சுளை இருக்கும். விற்பனை அமோகமாக இருப்பதால் எங்களுக்கு போதிய லாபம் கிடைக்கிறது’ என்றனர்.

sமீண்டும், மீண்டும் வர தூண்டும்:
கோடைகாலத்தில் சுங்குடி சேலைகளை அதிகளவில் உற்பத்தி செய்ய முடியும். அதனால்தான் தற்போது சின்னாளபட்டி முழுவதும் சுங்குடி சேலைகளுக்கு ஜவ்வரிசி மூலம் தயாரிக்கப்படும் கஞ்சியில் நனைத்து அதிகளவில் உலர வைத்து வருகின்றனர். இங்கு தயாராகும் சுங்குடி சேலைகள் ரகம், கலர், தரத்தை பொறுத்து ரூ.150 முதல் ரூ.700 வரையிலும் உயர் ரகமாக தயாரிக்கப்படும் சுங்குடி புடவைகள் அவற்றின் ஜரிகைகளை பொறுத்து ரூ.900 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஒருமுறை சுங்குடி நகரமான சின்னாளபட்டிக்கு வந்து சுங்குடி புடவைகள் எடுத்தவர்கள் வாடிக்கையாளர்களாக மாறி தொடர்ந்து இங்கு வந்து புடவைகள் எடுத்து செல்கின்றனர்.

திணறும் வாடிக்கையாளர்கள்:
சுங்குடி உற்பத்தியாளர்களுக்கிடையே டிசைன்களை உருவாக்குவதில் போட்டி ஏற்பட்டு கொண்டு ரகசியமாக தினசரி நூற்றுக்கணக்கான டிசைன்களை உருவாக்கி வருகின்றனர். இவ்வாறு புதிய டிசைகளில் தயாரிக்கப்படும் புடவைகளை வாரத்திற்கு ஒருமுறை டிசைன்களை மாற்றி மாற்றி விற்பனை செய்வதால் சுங்குடி புடவைகள் ரகங்களை எடுப்பதில் வாடிக்கையாளர்கள் திணறி விடுகின்றனர்.

Tags : Kerala ,jack sale ,Kodaikanal ,
× RELATED தமிழக – கேரள எல்லையோர கிராமங்களில்...