×

கோட்டை மாரியம்மன் கோயிலில் நாளை வைகாசி மகோற்சவ விழா திருத்தேர் வெள்ளோட்டம் மே 17ல் நடக்கிறது

திண்டுக்கல், மே 14: திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயிலில் நாளை வைகாசி மகோற்சவ விழா நடக்கிறது. திருத்தேர் வெள்ளோட்டம் மே 17ல் நடக்கிறது. திண்டுக்கல்லில் பிரசித்தி பெற்றது கோட்டை மாரியம்மன் கோயில். இங்கு 83வது ஆண்டு வைகாசி பஞ்சப்பிரகார மகா அபிஷேக மகோற்சவ விழா நாளை (மே 15ம் தேதி) நடைபெறவுள்ளது. இதையொட்டி அன்று காலை 10.30 மணிக்கு அம்மனுக்கு மகா அபிஷேகமும், தொடர்ந்து பகல் 12 மணிக்கு விசேஷ பூஜையும், 12.30 மணிக்கு பக்தர்களுக்கு பிரசாதமும் வழங்கப்படும்.

பின்னர் மாலை 5 மணிக்கு மூலஸ்தான அம்மனுக்கு மஞ்சள் காப்பு அலங்காரத்துடன் தீபாராதனையும், இரவு 7 மணிக்கு புஷ்ப பல்லக்கில் அம்மன் புறப்பாடும் நடைபெறும். தொடர்ந்து மே 17ம் தேதி திருத்தேர் வெள்ளோட்ட விழா நடைபெறவுள்ளது. கோட்டை மாரியம்மனுக்கு கோயில் பிரகாரத்தை சுற்றி வருவதற்கு தங்கத்தேர் மட்டும் உள்ளது. நகரின் நான்கு ரத வீதிகளில் சுற்றி வருவதற்கு ஒவ்வொரு ஆண்டும் திருவிழா காலங்களிலும், முக்கிய விஷேச நாட்களிலும் மின்னொளி அலங்கார தேரில்தான் அம்மன் வீதி உலா வரும்.

அம்மனுக்கு தனித்தேர் கிடையாது. இதை கருத்தில் கொண்டு திண்டுக்கல் அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம் மற்றும் நெல், அரிசி வர்த்தகர்கள் சங்கம் இணைந்து 30 டன் எடையும், 12 கால் அடி நீளமும், 12 கால் அடி அகலமும், 31 கால் அடி உயரம் மற்றும் 300க்கும் மேற்பட்ட சிற்பங்களும் கொண்ட தேர் கடந்த ஒன்றரை வருடங்களாக உருவானது.

வரும்16ம் தேதி மாலை 5 மணிக்கு மங்கல இசை முழங்க விக்னேஸ்வர பூஜை, பூர்வாங்கம் நடைபெறும். தொடர்ந்து 6.30 மணிக்கு முதற்கால யாக பூஜைகளும், இரவு 8.45 மணிக்கு பூர்ணாகுதி, தீபாராதனைகள் நடைபெறும். மறுநாள் 17ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 5.30 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜைகளும், 7 மணிக்கு அம்மன் அபிஷேகம் தொடர்ந்து ரதப்பிரதிஷ்டை அபிஷேகம் நடைபெறும். இதையடுத்து சதுர்த்தி திதியும், சுவாதி நட்சத்திரமும், சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 9.30 மணிக்கு கலசம் திருத்தேரில் எழுந்தருளி வடம் பிடித்து தொடங்க உள்ளது. தொடர்ந்து 12 மணிக்கு மாபெரும் அன்னதானம் நடைபெறும்.
ஏஐடியுசி பொதுக்கூட்டம்
செம்பட்டி, மே 14: சின்னாளபட்டி பூஞ்சோலையில் ஏஐடியூசி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. சிபிஐ மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜாமணி தலைமை தாங்கினார். நகர செயலாளர் கல்யாணி, ஆட்டோ நலசங்கத்தலைவர் ரமேஷ், செயலாளர் பிரகாஷ் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சின்னாளபட்டியில் உள்ள ரேஷன் கடைகளில் அரிசி, பருப்பு வாங்க வரும் பொதுமக்களிடம் ஊழியர்கள் சோப், டீத்தூள் உள்பட இதர பொருட்களை வாங்குமாறு வற்புறுத்துகின்றனர்.

இல்லையென்றால் ரேஷன் பொருட்கள் விநியோகம் இல்லை எனக்கூறி தர மறுக்கின்றனர். இதை வட்ட வழங்கல் அதிகாரிகள் கண்டிப்பதுடன், பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்கள் முறையாக விநியோகிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதில் ஏஐடியூசி மாவட்ட கௌரவ தலைவர் துரை சந்திரமோகன், மாவட்ட தலைவர் ஜெயமணி, சிபிஐ மாவட்ட குழு நாமதேவன், ஒன்றிய செயலாளர் இலக்கியராஜ், ஆட்டோ சங்க மாவட்ட செயலாளர் பாண்டி உட்பட பலர் கலந்து கொண்டனர். நகர ஆட்டோ சங்க பொருளாளர் சதீஸ்குமார் நன்றி கூறினார்.

Tags : tomb ,Mayakthavasam Festival ,Fort Mariamman Temple ,
× RELATED அரசு பஸ் கண்டக்டரை தாக்கிய போதை நபர் கைது