×

அணைக்கட்டு அடுத்த வரதலம்பட்டில் தண்ணீர் தேடி வீட்டில் தஞ்சம் அடைந்த புள்ளிமான் வனத்துறையினர் மீட்டு காப்புகாட்டில் விட்டனர்

அணைக்கட்டு, மே 14: அணைக்கட்டு அடுத்த வரதலம்பட்டில் தன்ணீர் தேடி வீட்டில் தஞ்சம் அடைந்த புள்ளிமானை வனத்துறையினர் மீட்டு காப்பு காட்டில் விட்டனர். வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகாவுக்கு உட்பட்ட ஒடுகத்தூர் வனத்துறை கட்டுப்பாட்டில் அரசம்பட்டு, பருவமலை, கருத்தமலை, சானாங்குப்பம் உள்ளிட்ட காப்புகாடுகள் உள்ளன. இந்த காப்புகாட்டில் மான் உள்ளிட்ட பல விலங்குகள், உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. அதில் மான் உள்ளிட்ட விலங்கினங்கள் தண்ணீர் தேடி அடிக்கடி ஊருக்குள் வந்துவிடுகிறது.


இதனை தவிர்க்க வனத்துறையினர் காப்பு காட்டில் உள்ள தண்ணீர் தொட்டிகளில் நீர் நிரப்பி வருகின்றனர். இருப்பினும் மான்கள் தண்ணீர் தேடி ஊருக்குள் வந்துவிடுகிறது. இந்நிலையில் நேற்று காலை 4 வயது ஆண் புள்ளி மான் ஒன்று வழி தவறி பருவமலை காப்பு காட்டில் இருந்து தண்ணீர் தேடி அணைக்கட்டு அடுத்த வரதலம்பட்டு கிராமத்திறகு வந்தது. பின்னர், அங்கிருந்த ஒரு வீட்டிற்குள் புகுந்தது. இதைப்பார்த்த அங்கிருந்த மக்கள் மானை பிடித்து வைத்தனர். விஏஓ ராஜி கொடுத்த தகவலின்பேரில் அங்கு வந்த ஒடுகத்தூர் வனத்துறையினர், மானை பிடித்து அதற்கு தண்ணீர் கொடுத்து மீண்டும் ஒடுகத்தூர் வனசரகத்திற்கு உட்பட்ட பருவமலை காப்பு காட்டில் கொண்டு சென்று விட்டனர்.

Tags : dam ,home ,downtown ,
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து...