×

மதுரை அரசு மருத்துவமனையில் மின்தடையால் உயிரிழந்தவரின் குடும்பத்தினர் நிவாரணம் வழங்ககோரி விருதுநகர் கலெக்டரிடம் மனு

விருதுநகர், மே 14: விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் வட்டம் அயன்கரிசல்குளத்தை சேர்ந்தவர் லாரி டிரைவர் ரவீந்திரன்(52). இவர் கடந்த 3ம் தேதி வீட்டில் தவறி விழுந்ததில் தலையில் அடிபட்டு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டது. இதை தொடர்ந்து மதுரை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அறுவைச் சிகிச்சைக்கு பணம் இல்லாததால் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மே.5ம் தேதி அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தீவிர சிகிச்சைப்பிரிவில் இருந்துள்ளார்.

ஆக்சிஜன் சிலிண்டர் சுவாச கண்காணிப்பில் இருந்தவர், மே.7 தேதி மாலை 5.45 மணிக்கு மருத்துவமனையில் ஏற்பட்ட மின்தடையால் மூச்சுத்திணறி ரவீந்திரன் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். 5 நோயாளிகளின் மரணத்திற்கு விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ரவீந்திரன் மனைவி மயிலேஸ்வரி(36), மகள் தயாளு(14) உறவினர்கள் விருதுநகர் கலெக்டரின் நேர்முக உதவியாளர் செந்தில்குமாரியிடம் அளித்த மனுவில், மதுரை அரசு மருத்துவமனையில் ஜெனரேட்டர் பழுதால் மின்தடை இன்றி எனது கணவர் உயிரிழந்துள்ளார். இதற்கு அரசு மருத்துவமனை நிர்வாகம் தான் பொறுப்பு, மின் விநியோகத்தை சரியாக கவனிக்காததே காரணம்.

ஜெனரேட்டர் செயல்பட்டு இருந்தால் உயிரிழப்பு ஏற்பட்டு இருக்காது. ஏழ்மை நிலையில் 14 வயது மகளுடன் தவித்து கொண்டு இருக்கிறேன். குடும்ப சூழ்நிலை கருதி அரசு வேலை வழங்க வேண்டும். மகளின் படிப்பிற்கு உதவி செய்ய வேண்டும். இறப்பிற்கான உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென மனுவில் தெரிவித்துள்ளார்.

Tags : Madurai Government Hospital ,victim ,
× RELATED மதுரை அரசு மருத்துவமனையில் இருந்து...