×

மணல் ஏற்றி வந்த டிராக்டர் பறிமுதல்

சிவகாசி, மே 14: சிவகாசி அருகே அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்தனர். சிவகாசி அருகே அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த டிராக்டரை  போலீசார் பறிமுதல் செய்தனர். சிவகாசி அருகே சுக்ரார்பட்டியில் எஸ்.ஐ., கார்த்திக் மற்றும் போலீசார் ரோந்து  பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அனுமதியின்றி டிராக்டரில்  மணல் ஏற்றி வந்த பழைய வெள்ளையாபுரத்தை சேர்ந்த கணேஷ்குமார் (26)  கங்காகுளத்தை சேர்ந்த அய்யனார் (30) ஆகியோரை போலீசார் கைது செய்து,  டிராக்டரை பறிமுதல் செய்தனர். வழக்கில் தொடர்புடைய பாலாஜி நகரை சேர்ந்த பெருமாளை தேடி வருகின்றனர்.

Tags : Sandy ,
× RELATED ஆத்தூர் தலைவாசல் அருகே இருசக்கர...