தென் பாலத்திலிருந்து தவறி விழுந்து டெய்லர் பலி

திருச்சி, மே 14: கரூர் மாவட்டம் நெய்தலூர் மாதாகோயில் தெருவை சேர்ந்தவர் முகமது இஸ்மாயில்(40). டெய்லர். இவருக்கு சொந்தமாக திருச்சி கோட்டை சமஸ்திரான் தெருவில் வீடு உள்ளது. இதில் இடப்பிரச்னை தொடர்பாக தனது அண்ணனுடன் பேசுவதற்காக நேற்றுமுன்தினம் திருச்சி வந்தார். தொடர்ந்து முகமது இஸ்மாயில், இவரது அண்ணன் இருவரும் தில்லைநகர் அருகே உள்ள தென்னூர் மேம்பாலத்தில் உள்ள படிக்கட்டில் ஏறினர். அப்போது படியிலிருந்து தவறி விழுந்த முகமது இஸ்மாயில் தலையில் பலத்த காயமடைந்து இறந்தார். இதுகுறித்து தில்லைநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

More