×

பெரியகுளத்தில் நாளை அகில இந்திய கூடைப்பந்து போட்டி தொடங்குகிறது

பெரியகுளம், மே 14: பெரியகுளத்தில் 60ம் வைரவிழா ஆண்டு அகில இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டிகள்  மே 15ந்தேதி இரவு மின்னொளியில் நடைபெற உள்ளது.  இந்த போட்டிகளில் மே 21ந்தேதி வரை நடைபெற உள்ளது. இதில்   லோனாவாலா கப்பல்படை அணி, புதுடெல்லி இந்திய விமானப்படை அணி, தெலங்கானா மாநில ஒய்எம்ஜி  அணி, புதுடெல்லி இந்திய தரைப்படை அணி, வாரணாசி டீசல்லோகோ அணி, செகந்திராபாத் ஏஓசி அணி, போபால் இஎம்இ அணி, கேரளமாநில மின்வாரிய அணி, பெங்களுரு பாங்க் ஆப் பரோடா (விஜயா வங்கி) அணி,   சென்னை கஸ்டம்ஸ், சென்னை ஐசிஎப் அணி, சென்னை விளையாட்டு விடுதி அணி, சென்னை தெற்கு ரயில்வே அணி,  கரூர் டெக்ஸ் சிட்டி கூடைப்பந்து கழக அணி, பெரியகுளம் சில்வர் ஜூப்லி கூடைப்பந்து கழக அணி உட்பட அகில இந்திய அளவில் தலை சிறந்த அணிகள் விளையாட உள்ளன.

போட்டிகள் நாக் அவுட் மற்றும் லீக் சுற்று முறையில் நடைபெற உள்ளன. இதில் வெற்றி பெற்று முதலிடம் பெறும் அணிக்கு 60 ஆயிரம் ரூபாய் மற்றும் பி.டி.சிதம்பரசூரியநாராயணன் நினைவு சுழற்கோப்பை, இரண்டாம் இடத்திற்கு ரூ. 40 ஆயிரம் மற்றும் அழகு சங்கரலிங்கம் நினைவு சுழற்கோப்பை,  மூன்றாம் பரிசு ரூ.30 ஆயிரம் மற்றும் பொன்னையா-சீத்தம்மாள் நினைவு சுழற்கோப்பை, நான்காம் பரிசு ரூ. 20 ஆயிரம் மற்றும் இன்ஜூனியர் பாலசுப்பிரமணியன் நினைவு சுழற்கோப்பை வழங்கப்பட உள்ளது.

அனைத்து போட்டிகளின் முடிவில் சிறந்த விளையாட்டு வீரராக தேர்வு செய்யப்படும் வீரருக்கு தேனி அருண் மோட்டார்ஸ் உரிமையாளர் திருமதி பவுன் கோயபல்ஸ் ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் ஸ்கூட்டர் பரிசாக வழங்குகிறார்.  விளையாட்டுப்போட்டிகளுக்கான ஏற்பாடுகளை சில்வர் சூப்லி ஸ்போர்ட்ஸ் கிளப் செயலர் சிதம்பரசூரியவேலு, தலைவர் அமர்நாத், துணைத்தலைவர் அபுதாகிர், பொருளாளர் செல்வராஜ் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

Tags : basketball tournament ,All India ,
× RELATED மராட்டியத்தில் இந்தியா கூட்டணி...