×

திருச்சி விமான நிலையத்தில் ரூ.6.31 லட்சம் மதிப்பில் கடத்தல் தங்கம் பறிமுதல்

ஏர்போர்ட், மே 14:  திருச்சி விமான நிலையத்திற்கு மலேசியாவிலிருந்து வந்த திருநெல்வேலியை சேர்ந்த பயணியிடம் இருந்து ரூ.6.31லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கத்தை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு நாள்தோறும் சிங்கப்பூர் , மலேசியா, துபாய் இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து விமானங்கள் வருவதும், இங்கிருந்து பல நாடுகளுக்கு விமானங்கள் செல்வதும் வழக்கம். வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளையும், அதேபோல்  இங்கிருந்து செல்லும் பயணிகளையும் விமான நிலைய மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்வது வழக்கம். சோதனையில் வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரும் கடத்தல் தங்கங்கள், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் போன்றவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு  ஏர் ஏசியா விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளின் உடைமைகளை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது உடலிலும், பேண்ட் பாக்கெட்டிலும் மறைத்து வைத்து தங்கம் கடத்தி வந்த திருநெல்வேலியை சேர்ந்த அப்துல் மஜீத் (42) என்பவரிடம் இருந்து 6,31,385  லட்சம் ரூபாய் மதிப்புள்ள 197 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்து அவரிடம் தொடர்ந்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Tiruchirapalli airport ,
× RELATED திருச்சி விமான நிலையத்தில் ரூ.27 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்