×

மன்னார்குடியில் யுகாதி பண்டிகை கொண்டாட்டம்

மன்னார்குடி, மே 14: மன்னார்குடி வட்டார நாயுடு மகாஐன சங்கத்தின் 33ம் ஆண்டு விழா மற்றும் தெலுங்கு வருட பிறப்பை முன்னிட்டு யுகாதி பண்டிகை விழா மன்னார்குடியில் நடைப்பெற்றது. விழாவிற்கு நாயுடு மகாஐன சங்க தலைவர் ராமதாஸ் தலைமை வகித்தார். சங்கத்தின் ஆண்டறிக்கையை அதன் பொருளாளர் சந்தானகிருஷ்ணன் வாசித்தார். விழாவில் 10 மற்றும் 12ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவியர்களை பாராட்டியும், விழாவையொட்டி நடைப்பெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களையும் பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டன. பரிசு பெற்றவர்களை பாராட்டி திருவாரூர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கல்லூரி தலைவர் வெங்கட்ராஜூலு, சங்கத்தின் நிர்வாகிகள் ராஜகோபால், தசரதன், எல்ஐசி கோவிந்தராஜ் ஆகியோர் பேசினர். முன்னதாக மன்ைன வட்டார நாயுடு மகாஐன சங்கத்தின் செயலாளர் விஜயராகவன் வரவேற்றார். முடிவில் கிருபா நன்றி கூறினார்.

Tags : Celebration ,festival ,Yogi ,Mannar ,
× RELATED திருப்பதி, சித்தூர், ஸ்ரீகாளஹஸ்தியில் யுகாதி பண்டிகை கோலாகல கொண்டாட்டம்