இடும்பாவனம் சத்குணநாத கோயில் வைகாசி திருவிழாவில் புஷ்ப பல்லக்கில் சுவாமி வீதியுலா

முத்துப்பேட்டை, மே 14: முத்துப்பேட்டையை அடுத்த இடும்பாவனம் சத்குணநாத கோயிலில் நடந்து வரும் வைகாசி திருவிழாவையொட்டி புஷ்பபல்லக்கில் சுவாமி வீதிவுலா நடந்தது. திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த இடும்பாவனம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற சத்குணநாத கோயிலில் இந்தாண்டு வைகாசி விசாகப்பெருவிழா கடந்த 9ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனையடுத்து அன்று முதல் தினந்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று முன்தினம் தொண்டியக்காடு கிராம மக்கள் சார்பில் காலை பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா, அதனை தொடர்ந்து பல்வேறு பூஜைகள், சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தன. இரவு புஷ்ப பல்லக்கில் அலங்கரித்து வைக்கப்பட்ட சுவாமி திருவீதியுலா நடந்தது. வீதியுலா கோயிலிலிருந்து புறப்பட்டு பல்வேறு பகுதிக்கு சென்று வந்தது. இதில் சுற்றுபகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

× RELATED ஊமாரெட்டியூர் ஐயப்பன் கோயில் சபரிமலை யாத்திரை உற்சவம்