×

விவசாய பணிகள் கடும் பாதிப்பு சிகிச்சையில் மனைவி, குழந்தை பலி டாக்டர், நர்சுகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் கணவர் கலெக்டரிடம் புகார்

ராமநாதபுரம், மே 14: ராமநாதபுரம் தாலுகா உச்சிப்புளி அருகே பிள்ளைமடம் கிராமத்தில் வசித்து வரும் முருகன் கலெக்டர் அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில், ‘‘எனது மனைவி லட்சுமி கர்ப்பமான நாள் முதல் தமிழக அரசின் தாய்சேய் நல திட்டத்தின்படி மருத்துவ சிகிச்சை தொடர்ச்சியாக பெற்று கடந்த 9ம் தேதி உச்சிப்புளி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்காக சேர்த்தேன். அங்குள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தல்படி ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தேன். பிரசவ வார்டில் அவசர சிகிச்சை தேவை எனக் கூறியும் பணியில் இருந்த மருத்துவர்கள் எந்தவித சிகிச்சையும் செய்யாமல் அலட்சியப் போக்குடன் இருந்தார்கள்.

இந்நிலையில் நர்ஸ் வந்து எனது அண்ணியிடம் கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கி சென்றுள்ளனர். சிறிது நேரம் கழித்து குழந்தை இறந்து விட்டது. மனைவிக்கும் ரத்தப்போக்கு அதிகமாகி சிறிது நேரம் கழித்து இறந்து விட்டார். டாக்டர்களின் கவனக்குறைவு, உரிய சிகிச்சை அளிக்காததே எனது மனைவி, குழந்தை இறந்ததற்கு காரணம் என உயர் அதிகாரியிடம் புகார் செய்தேன். அரசு தலைமை மருத்துவமனை அதிகாரிகள், செவிலியர் மருத்துவர் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

Tags : nurses ,doctor ,collector ,
× RELATED பூசணி விதையின் பயன்கள்!