×

வைகாசி விசாக திருவிழா

ராமநாதபுரம், மே 14: அழகன்குளம் பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வைகாசி விசாக திருவிழா கடந்த 8ம் தேதி தொடங்கியது. 9ம் தேதி காலை பாலசுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், காப்பு கட்டும் வைபவமும் இரவு திருவிளக்கு பூஜையும் நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். வைகாசி விசாகப் பெருவிழாவை முன்னிட்டு தினந்தோறும் இரவு 7 மணிக்கு ஆன்மிக சொற்பொழிவு மே 18 வரை நடக்கிறது.

விழாவின் 10 நாட்களும் அழகிய நாயகி அம்மன் மாதர் சங்கத்தினரின் திருப்புகழ் பாடல்கள், பஜனைகள், தொடர்ந்து சான்றோர்களின் சமயற் சொற்பொழிவுகளும் நடைபெறுகிறது. மே 18 விசாக தினத்தில் சிறப்பு அபிஷேகத்துடன் காலை 8.30 மணிக்கு பால்குடம், காவடி, ரதக்காவடி, பறவைக் காவடி, மயில் காவடியும் எடுத்து பக்தர்கள் நேர்த்தி கடனை செலுத்துவார்கள். பகலில் பக்தர்களுக்கு அன்னதானமும், இரவு 10:45 மணிக்கு பூக்குழி உற்சவமும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.

Tags : Maya Visa Festival ,
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை