×

இரண்டாம் ஆண்டு ஹாக்கி போட்டியில் தஞ்சை அணி வெற்றி

>சிவகங்கை, மே 14: சிவகங்கையில் ஒருங்கிணைந்த சிவகங்கை மாவட்ட ஹாக்கி கழகம் சார்பாக டாக்டர் அப்துல் கலாம் இரண்டாம் ஆண்டு ஹாக்கிப்போட்டிகள் நடந்தன. மூன்று நாட்கள் சிவகங்கை திறந்தவெளி விளையாட்டரங்கில் நடந்த போட்டியில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 12 அணிகள் பங்கேற்றனர். இதில் ஆண்களுக்கான போட்டியில் தஞ்சாவூர் அணி முதலிடத்தையும், ராமநாதபுரம் அணி இரண்டாம் இடத்தையும், சிவகங்கை டாக்டர் அப்துல் கலாம் அணி மூன்றாம் இடத்தையும் பெற்றன.

பெண்களுக்கான போட்டியில் செட்டிநாடு பெண்கள் ஹாக்கி கிளப் முதலிடத்தையும், டாக்டர் அப்துல் கலாம் ஹாக்கி கிளப் இரண்டாவது இடத்தையும், புனித ஜஸ்டின் ஹாக்கி கிளப் மூன்றாம் இடத்தையும் பெற்றன. வெற்றி பெற்ற அணிகளுக்கான பசளிப்பு விழா மற்றும் சிவகங்கை மாவட்ட முன்னாள் ஹாக்கி வீரர்கள் சார்பாக சிவகங்கை மாவட்டத்தின் முதல் ஹாக்கி பயிற்சியாளரும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாடு ஆணையத்தின் முதுநிலை மேலாளருமான முருகனின் பணிநிறைவு பாராட்டு விழாவும் நடைபெற்றது.

ஒருங்கிணைந்த சிவகங்கை மாவட்ட ஹாக்கி கழக செயலாளர் தியாகபூமி வரவேற்றார். முன்னாள் எம்எல்ஏ குணசேகரன் பரிசுகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் தேசிய நல்லாசிரியர் கண்ணப்பன், மாவட்ட ஹாக்கி கழகத்தின் மகளிர் பொறுப்பாளர் அழகிமீனாள் தேவதாஸ், ராமநாதபுரம் மாவட்ட ஹாக்கி கழக செயலாளர் கிழவன் சேதுபதி, உடற்கல்வி ஆசிரியர்கள் முத்துக்கண்ணன் தடியப்பன், மோகன், மதுசூதனன், சீனிவாசன் நிர்வாகிகள் கார்த்திகைசாமி, கருணாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Thanjavur ,team win ,hockey tournament ,
× RELATED தஞ்சாவூர் நாடாளுமன்ற தேர்தலில் 100%...