×

தேவாலய சப்பர பவனி திருவிழா

சாயல்குடி, மே 14: கடலாடி புனித அந்தோணியார் தேவாலய திருவிழா கடந்த திங்கள் கிழமை கொடியேற்றத்துடன் துவங்கியது. ஒருவாரகால திருவிழாவில் தினந்தோறும் திருப்பலி மற்றும் பொது ஜெபம், கூட்டு பிரார்த்தனை நடந்தது. வெள்ளிக்கிழமை இரவு புனித அந்தோணியார் சப்பரத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிவகங்கை மறைமாவட்ட முதன்மை பங்குதந்தை ஜோசப்லூர் துராஜாஅடிகளார் தலைமையில் கடலாடியின் முக்கிய வீதிகளில் ஊர்வலம் நடந்தது.

நேற்று திருவிழா நிறைவையொட்டி திருப்பலியுடன் கொடி இறக்கம் செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் வேம்பார் பங்குதந்தை பிரதீபன்லிபோன்ஸ், மூக்கையூர், கடலாடி பங்குதந்தை லூர்துராஜ் கலந்து கொண்டு உலகநன்மை மற்றும் மழை பெய்ய வேண்டி சிறப்பு ஜெபம் நடந்த்தினர். இதில் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags : Church chapel festival festival ,
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை