×

இடி மின்னலுடன் வாடிப்பட்டியில் மழை

வாடிப்பட்டி, மே 14: வாடிப்பட்டி பகுதியில் நேற்று இரவில் பெய்த மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
வாடிப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக கடுமையான வெயில் கொளுத்தியது. அவ்வப்போது கூடும் மழை மேகங்களும் போக்கு காட்டி விட்டு கலைந்து சென்றன. இதனால் கடும் வெப்பத்தால் மக்கள் கடுமையாக அவதிப்பட்டனர்.

இந்நிலையில் நேற்று இரவு திடீரென வாடிப்பட்டி மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளான ஆண்டிப்பட்டி, வடுகபட்டி, கச்சைகட்டி, குட்லாடம்பட்டி, செமினிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்தது. மழையினால் ஆங்காங்கே மின்தடை ஏற்பட்டது. இருப்பினும் வருணன் காட்டிய கருணையால் கடும் வெயிலில் வாடிய பொது மக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags :
× RELATED கொத்தனார் தூக்கிட்டு தற்கொலை