×

தீவிரவாதிகளை அழிக்க முனியாண்டி ஜெயிக்கணும் சொன்னது தமிழிசை

திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக வேட்பாளர் முனியாண்டியை ஆதரித்து தமிழக பாஜ தலைவர்  தமிழிசை நேற்று மாலை பிரச்சாரம் மேற்கொண்டார். தொகுதிக்கு உட்பட்ட நிலையூர், ஹார்விபட்டி, மகாலட்சுமி காலனி ஆகிய இடங்களில் திறந்தவேனில் பிரச்சாரம் மேற்கொண்டார்.  அப்போது பேசிய அவர், ‘‘கமலஹாசன் படப்பிடிப்பு தளத்தில் கேமரா முன்பு பேசுவது போல் பேசுகிறார். அதை மக்கள் ஒப்புக்கொள்வார்கள் என நினைக்கிறார்.  கமலுக்கு கி.வீரமணி ஆதரவாக குரல் கொடுக்கிறார். பாஜ-அதிமுக கூட்டணிக்கு தான் இன்றைய சூழ்நிலை சாதகமாக உள்ளது. வலுவான தலைவராக மோடி 23ம் தேதி மீண்டும் பிரதமராக உட்காரப்போகிறார். அதன்பின்னர் இபிஎஸ், ஓபிஎஸ் இன்னும் பலம் பொருந்தியவர்களாக இருக்கப்போகிறார்கள். தாமரை இந்தியா முழுவதும் பரவும். தீவிரவாதிகளை அழித்து இந்த நாட்டை பாதுகாக்க, மாநிலத்திலும் மத்தியிலும் நிலையான ஆட்சி ஏற்பட, இரட்டை இலையில் வாக்களித்து முனியாண்டியை வெற்றிபெறச் செய்ய வேண்டும்’’ என்றார்.

Tags : Muniyandi Jayakannam ,terrorists ,
× RELATED 4 ஐஎஸ் தீவிரவாதிகளை இந்தியாவே விசாரிக்கும்: இலங்கை அறிவிப்பு