கறம்பக்குடி பகுதி கடைவீதியில் தடை செய்த பிளாஸ்டிக் பறிமுதல்

கறம்பக்குடி, மே14: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பகுதிகள் முழுவதும் தமிழக அரசு தடை விதித்துள்ள பிளாஸ்டிக் பை மற்றும் தடை செய்த பொருட்களை பேரூராட்சி நிர்வாகம் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்கபட்டு வருகிறது.  பல்வேறு கடைகளில் தடையை மீறி பிளாஸ்டிக் பைகளை விற்பனை செய்வதாக வந்த தகவலை அடுத்து கறம்பக்குடி பேரூராட்சி அலுவலகம் சார்பில் பேரூராட்சி  அலுவலர்கள் கறம்பக்குடி உள் கடை வீதி, மீன் மார்க்கெட், டோல்கேட் வீதி பகுதிகளில் உள்ள கடைகளில்  பிளாஸ்டிக்  கேரி  பைகளை பயன் படுத்துகிறார்கள் என்று சோதனை நடத்தினர். அப்போது கடைகள் வணிக  நிறுவனங்கள், உணவகங்கள் தள்ளுவண்டி கடைகள் ஆகிய இடங்களில் விற்பனை செய்வது தெரியவந்தது.
இதையடுத்து அவர்களிடமிருந்து பிளாஸ்டிக் கேரி பைகளை பறிமுதல் செய்து விற்கும் கடைக்காரர்களிடம் அபராதமும் விதித்து எச்சரித்தனர்.

Tags : Karambukudi ,
× RELATED காங்கயத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்