×

கறம்பக்குடி அருகே கஜா புயலுக்கு தூக்கி வீசப்பட்ட அரசு பள்ளியின் தகர மேற்கூரை 6 மாதமாகியும் சீரமைக்காத அவலம்

கறம்பக்குடி, மே 14: கறம்பக்குடி அருகே கஜா புயலுக்கு தூக்கி வீசப்பட்ட அரசு பள்ளியின் மேற்கூரை இன்னும் சீரமைக்கப்படாத நிலையில் உள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பந்துவகோட்டை கிராமம் அமைந்துள்ளது. இவ்வூராட்சியில் சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவ்வூாட்சியில் பல ஆண்டுகளாக பள்ளி மாணவ, மாணவிகளின் நலன் கருதி கல்வி பயில்வதற்காக அரசு நடுநிலை பள்ளி செயல்பட்டு வந்தது. பந்துவகோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் பொது மக்கள் தங்களது குழந்தைகள் உயர் நிலை கல்வி பயில வேண்டும் என்பதை மனதில் கொண்டு அரசுக்கு இக்கிராமத்தில் அரசு உயர் நிலை பள்ளி அமைக்க வேண்டும் என்று அனைத்து தரப்பு பொதுமக்கள் சார்பில் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். பொது மக்களின் கோரிக்கைகள் மற்றும் பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு பந்துவகோட்டை பகுதி பொது மக்களின் நலன் கருதி 2012ம் ஆண்டு ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலை பள்ளியை அரசு உயர் நிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. அதன் பிறகு அரசு பள்ளியிலேயே உயர் நிலை பள்ளி வகுப்புகள் செயல்பட்டு வந்ததால், பள்ளி மாணவ, மாணவிகள் தினம்தோறும் ஒருவித பயத்துடனே பள்ளிக்கு வந்து சென்றனர். உயர்நிலை பள்ளியில் கல்வி பயிலும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் நலன் கருதி பலமுறை கோரிக்கை வைத்ததற்கு பிறகு புதிய உயர் நிலை பள்ளிக்கான கட்டிடம் கட்டுவதற்கு அரசு நிதி ஒதுக்கப்பட்டது.  அதன் மூலம் கட்டிடம் கட்டபட்டு கடந்த 2017ம் ஆண்டு முதல் அரசு உயர் நிலை பள்ளியானது புதிய கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. திடீரென கடந்த நவம்பர் மாதம் ஏற்பட்ட கஜா புயல் தாக்குதலால் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் கஜா புயலுக்கு பாதிப்படைந்து பெருத்த சேதம் ஏற்பட்டது.


இதில் பந்துவகோட்டை கிராமத்தில் இயங்கி வரும் அரசு பள்ளியும் தப்பவில்லை. பள்ளி கட்டிடத்தின் முன்பு தினம்தோறும் பள்ளிக்கு வந்து செல்லும் மாணவ, மாணவிகளின் நலன் கருதி சைக்கிள்கள்,  இரு சக்கர வாகனம் நிறுத்துவதற்கு அமைக்கப்பட ஆஸ்படாஸ் சீட் கொட்டகை மற்றும்  அதன் எதிரே பள்ளியில் நடைபெறும் விழாக்களை நடுதுவதற்காக அமைக்கப்பட பள்ளி களையரங்க ஆஸ்படாஸ் மேற்கூரை மற்றும் புதிய உயர் நிலை பள்ளி கட்டிடத்தின் மேலே அமைக்கப்பட்டுள்ள ஆஸ்படாஸ் மேற்கூரை ஆகியவை பள்ளி வளாகம் முன்பே தூக்கி வீசப்பட்டு அருகருகே கிடக்கிறது. இதனால் வாகனங்களை நிறுத்த இருப்பிடம் இன்றி வெயிலில் சைக்கிள்களை நிறுத்துகின்றனர். எனவே மாணவ, மாணவிகள் நலன் கருதி ஆபத்தை ஏற்படுத்துவதற்கு முன்பு சிதறி கிடக்கின்ற ஆஸ்படாஸ் சீட் மேற்கூரைகளை அகற்றி, புதிய மேற்கூரைகள் அமைத்து தர வேண்டும் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : government school ,storm ,Karambukudi ,
× RELATED ஒடுகத்தூர் அருகே பரபரப்பு அரசு...