புதுக்கோட்டை மாவட்டத்தில் குற்ற செயல்களை தடுக்க நகரில் அனைத்து பகுதியிலும் சிசிடிவி கேமரா பொதுமக்கள் கோரிக்கை

புதுக்கோட்டை,மே 14: புதுக்கோட்டை நகர் மற்றும் புறநகர் பகுதியில் நடக்கும் குற்றசம்பவங்களை தடுக்க அனைத்து பகுதிகளிலம் சிசிடிவி கேமரா பொருத்த தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  
புதுக்கோட்டை நகர் பகுதியில் காவல் துறையினர் சிசிடிவி கேமாரா பொருத்தி தொடர் கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக புதிய பேருந்து நிலையம், கீழ ராஜ வீதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்பை கருதி சிசிடிவி கேமரா பொருத்துப்பட்டு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகின்றது. இவைகள் போதுமானதாக இல்லை. பெருகி வரும் சமூக குற்றங்களை தடுக்கும் வகையில் நகர் மற்றும் புறநகர் வார்டுபகுதிகளான நரிமேடு, சமத்துவபுரம், அடப்பன்வயல், விஸ்வாஸ்நகர், இறைவன் நகர், கோவில்பட்டி, திருகோகர்ணம், திருவப்பூர், மாலையீடு, ராஜகோபாலபுரம், கலீப்நகர், ராம்நகர், காந்திநகர், போஸ்நகர், காமராஜபுரம், அசோக்நகர், மேட்டுப்பட்டி, மச்சுவாடி, புதுக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் சமூக விரோத செயல்கள்  செயின் பறிப்பு போன்ற அனைத்து  சம்பவங்கள் நடந்தேறிவருகிறது. தனிமனிதனின் உயிர் பாதுகாப்பு உடமை பாதுகாப்பு இல்லாமல் உள்ளது. இதனால் பொதுமக்களும் இளம்பெண்கள் மற்றும் பெண்களும் உரிய பாதுகாப்பு இன்றி அச்ச உணர்வோடு வழந்து வர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் பொதுமக்கள் பாதுகாப்பு நலன் கருதி அனைத்து பகுதிகளிலும சிசிடிவி கேமரா பெருத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: புதுக்கோட்டை நகர் பகுதியில் பல இடங்களில் தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. போலீசில் புகார் அளித்தவுடன் திருடர்களை தேடுகின்றனர். ஆனால் யார் திருடியது என்று யாருக்கு தெரிவதில்லை. சிசிடிவி கேமரா இருந்தால் குற்றம் நடந்தவுடன் இதில் யார் சம்மந்தப்பட்டடு இருக்கிறார்கள் என்று தெரியவந்துவிடடும். போலீசார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து உரியவர்களை கைது செய்து சிறையில் அடைக்காலம். இதபோல் தொடர்ந்து நடைபெறும் போது திருட்டு சம்பம் குறையும். சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டால் கண்டிப்பாக திருட்டு உள்ளிட்ட குற்றசெயல்கள் குறையும். இதனால் புதுக்கோட்டை நகர் பகுதியில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என்றனர்.

Tags : areas ,city ,district ,Pudukottai ,
× RELATED குடியிருப்பு பகுதியில் கோழிப்பண்ணை அமைக்க கூடாது