×

மணமேல்குடி கடைவீதியில் அரசு பேருந்தை வழிமறித்து டிரைவருக்கு செம டோஸ்

மணமேல்குடி, மே14: நேரத்திற்கு முன் கிளம்பியதால் மணமேல்குடி கடைவீதியில் அரசு பேருந்தை வழிமறித்து தனியார் பஸ் டிரைவர் செம டோஸ் விட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மணமேல்குடி கடைவீதியில் நேற்று மாலை புதுக்கோட்டையிலிருந்து வந்த தனியார் பேருந்தும், பட்டுக்கோட்டையிலிருந்து வந்த அரசு பேருந்தும் போட்டி போட்டுக்கொண்டு அதிவேகமாக வந்தது. உடனே தனியார் பேருந்து டிரைவர் அரசு பேருந்தை வழிமறித்து சாலையில் நிறுத்தி டிரைவருடன் எனது நேரத்தில் ஏன் வந்தாய் என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் பயணிகள் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாமல் அவதிக்குள்ளாயினர். இதுகுறித்து பயணிகள் கூறுகையில், கிழக்கு கடற்கரை சாலையில் அடிக்கடி தனியார் பேருந்திற்கும் அரசு பேருந்து டிரைவர்களும் நேர கணக்கை வைத்து போட்டி போட்டு வாகனத்தை வேகமாக இயக்குகின்றனர். எனவே போக்குவரத்து துறை அதிகாரிகள் பேருந்துகளின் கால அட்டவணையை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பது கிழக்கு கடற்கரை சாலை பயணிகளின் கோரிக்கையாகும்.

Tags : Manamkuldi ,
× RELATED மணமேல்குடி அருகே சேவல் சண்டை போட்டி 26 பேர் மீது வழக்கு பதிவு