×

தா.பழூர் அருகே தீவிபத்தில் வைக்கோல் போர் சாம்பல்

தா.பழூர், மே 14: தா.பழூர் அருகே நடந்த தீவிபத்தில் வைக்கோல் போர் முழுவதும் எரிந்து சாம்பலானது.

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கூத்தங்குடி காலனி தெருவை சேர்ந்தவர் கண்ணதாசன் (58). இவர் வீட்டின் அருகே வைக்கோல் போர் வைத்திருந்தார்.

 இந்நிலையில் நேற்று கண்ணதாசன் வைக்கோல் போரை சுற்றியுள்ள முட்களை அகற்றி ஒரு இடத்தில் ஒன்று சேர்த்து அதை நெருப்பு வைத்து கொளுத்தினார்.
வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் முட்களில் எரிந்த நெருப்பு அருகிலிருந்த வைக்கோலுக்கு பரவி எரிய ஆரம்பித்தது.


இதையடுத்து கண்ணதாசன் அருகில் இருந்தவர்களை அழைத்து தீயை அணைக்க முயன்றார். ஆனால் தீ மளமளவென்று பரவியது. இதனால் ஜெயங்கொண்டம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
ஜெயங்கொண்டம் தீயணைப்பு நிலையத்தில் இருந்து வீரர்கள் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் ரூ.3,500 மதிப்புள்ள வைக்கோல் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது.

Tags : Straw ,fire ,Thalur ,
× RELATED நீலகிரி மாவட்டம் அருகே தீக்குளித்த...