×

நாகை நகராட்சி 16வது வார்டில் துர்நாற்றத்துடன் பாசிப்படர்ந்த குடிநீர் விநியோகம் 10 நாட்களாக மக்கள் கடும் அவதி

நாகை, மே 14: நாகை நகராட்சி 16வது வார்டில் துர்நாற்றத்துடன் பாசிப்படர்ந்து வரும் குடிநீரால் பொதுமக்கள் 10 நாட்களாக கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். நாகை நகராட்சிக்கு உட்பட்ட 16 வது வார்டான  சங்கரன்பிள்ளையார்கோயில் தெரு, மேல வாக்காங்கரை தெரு, சிவன் மட வளாகம், சிவன் மேல வீதி போன்ற பகுதியில் சுமார் 600க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர்.  இந்த பகுதிக்கு நாகை நகராட்சி சார்பில் வழங்கப்படும் குடிநீர் துர்நாற்றம் வீசுவதுடன் தண்ணீரில் சிறு, சிறு துண்டுகளாக வெள்ளை நிறத்தில் பாசி போன்ற பொருள் மிதக்கிறது. அத்துடன் தண்ணீரை பாத்திரத்தில் பிடித்து வைத்தால் தண்ணீரில் ஆயில் படலம் மிதக்கிறது. பைப் லையன்  உடைந்து நீண்ட நாட்கள் தண்ணீர் வெளியேறினால் அந்த இடம் சேரும், சகதியுமாக மாறுவதுடன், கால்நடைகள், நாய் போன்றவை அந்த இடத்தில் படுத்து மேலும் தண்ணீர் வினாகியுள்ளது. தண்ணீர் குழாயில் வரும்போது குழாயில் இருந்து தண்ணீர் வெளியேருவதும், தண்ணீர் நின்ற உடன் குழாய் உடைப்பு வழியாக தேங்கி கிடக்கும் அசுத்தநீர் குழாய் உட்புகுவதுமாக உள்ளது.


தண்ணீர் துர்நாற்றம் வீசுவதற்கு இதுதான் காரணமா? அல்லது வேறு ஏதும் காரணமாக என்பதை நகராட்சி நிர்வாகம் பார்க்காமல் உள்ளதால் தொடர்ந்து குடிநீரில் கழிவு நீர் கலந்து வருகிறது.   இந்த பிரச்னை கடந்த 10 நாட்களுக்கு மேல் உள்ளதையடுத்து இதுபற்றி அப்பகுதி பொதுமக்கள் நாகை நகராட்சி நிர்வாகத்திடம்  3 முறை நேரில் சென்று புகாராக தெரிவித்துள்ளனர். ஆனால் நாகை நகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாமல் உள்ளனர்.

அதிகாரிகள் மெத்தனம்

இந்நிலையில் கடந்த 10 நாட்களாக அந்த பகுதி மக்கள் குடி நீருக்காக நாகை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் உள்ள குடி நீர் குழாயில் இருந்து தண்ணீர் எடுத்து வந்து பயன்படுத்தி வருகின்றனர். குடி நீருக்காக பெண்கள் சுமார் ஒன்றை கிலோ மீட்டர் தூரத்திற்கு குடங்களை தலையிலும், இடுப்பிலும் சுமர்ந்து செல்கின்றனர். உடனே நாகை நகராட்சி நிர்வாகம் கால தாமதம் செய்யாமல் 16 வது வார்டுக்கு செல்லும் குடிநீர் குழாயை ஆய்வு செய்து பாதுகாக்கப்பட்ட குடிநீர் உடனே வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Nagapattinam 16th Ward ,
× RELATED நாகை நகராட்சி 16வது வார்டில் பாசிப்படர்ந்த குடிநீர் விநியோகம் சீரமைப்பு