×

ரமலான் மாதத்தில் தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் மஜக வலியுறுத்தல்

செம்பனார்கோவில், மே14: ரமலான் மாதத்தில் தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சி தீர்மானித்துள்ளது. நாகை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றியம், ஆக்கூரில் மனிதநேய ஜனநாயக கட்சியின் கிளை கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கிளை செயலாளர் முஹம்மது சஹின் தலைமை வகித்தார். கிளை பொருளாளர் முக்தார், கிளை துணை செயலாளர்கள் அசாருதீன், ஜஸ்பர், மருத்துவ சேவை அணி செயலாளர் ஜஸ்வத் அஸ்லம், மனிதநேய தொழிற் சங்க அணி செயலாளர்  புரோஸ் அஹமது, தகவல் தொழில் நுட்ப அணி செயலாளர் அப்துல் ரஹ்மான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிளை துணை செயலாளர் சல்மான் வரவேற்றார். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தலைமை செயற்குழு உறுப்பினர் ஷாஜஹான், கலந்து கொண்டு மனிதநேய ஜனநாயக கட்சியின் மக்கள் நலப்பணிகள் குறித்து பேசினார்.

 
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: அதிகரித்து வரும் அறிவிக்கப்படாத மின்வெட்டால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். மின்னழுத்தம் குறைவாக உள்ள நேரங்களில் மின் விசிறி, மின் மோட்டார், பிரிஜ், வாசிங் மிஷின், கிரைண்டர் போன்ற சாதனங்கள் பழுதாகி விடுகின்றன. வணிக நிறுவனங்கள் செயல்படுத்த முடியவில்லை. புனித ரமலான் மாதத்தில் முஸ்லிம்கள் இரவு தொழுகை, சகர் உணவு தயாரிப்பு போன்ற முக்கிய பணிகளை இரவு நேரத்தில் செய்ய வேண்டியுள்ளது. நள்ளிரவில் மின் நிறுத்தம் செய்யப்படுவதால் குழந்தைகள், வயதானவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் அவதிப்படுகின்றனர். எனவே மின்வெட்டை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். தடையில்லாத மின்சாரம் வழங்க வேண்டும். மாநில அரசு இட ஒதுக்கீட்டின் அளவுகோலை தீர்மானித்து கொள்ளும் வகையில் அரசியல் சாசன சட்டத்தில் மேற்கொள்ள வேண்டும். வெளிநாடு வாழ் தமிழர்களின் நலன் காக்க கேரளா அரசைப்போல தமிழக அரசும் தனி அமைச்சகத்தை அமைக்க வேண்டும்.  காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவுறுத்த வேண்டும். மயிலாடுதுறை பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையாக இருக்கும் மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags :
× RELATED மே தினத்தை முன்னிட்டு 2 மணி நேர தொடர் சாதனை சிலம்பாட்டம்