×

அனுமதியின்றி மண் எடுத்ததால் சூரக்காடு உப்பனாற்றின் கரை உடையும் அபாயம் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

சீர்காழி, மே14: சீர்காழி அருகே சூரக்காடு உப்பனாற்றில் கரை உடையும் அபாயத்தில் உள்ளது. சீர்காழி அருகே சூரக்காடு உப்பனாற்றின் குறுக்கே திட்டை ஊராட்சி  சிவனார் விளாகம் பகுதியிலிருந்து காரைமேடு ஊராட்சி பகுதிக்கு கொள்ளிடம் கூட்டு குடிநீர் பைப் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிக்காக உப்பனாற்றின் நடுவே காங்கிரீட் பையில் அமைக்கப்பட்டு அதன்மேல் ராட்சஷ குழாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.  இப்பணிகளுக்காக ஆற்றில்  600  மீட்டர்  தூரத்திற்கு அடைக்கும் பணிக்காக ஆற்றின் கரையிலிருந்து மண் எடுக்கப்பட்டு அதனைக் கொண்டு ஆற்றின் குறுக்கே ஆணை போடப்பட்டுள்ளது ஆற்றின் கரையில் இருந்து அதிகளவில் மணல் எடுக்கப்பட்டுள்ளதால் கரை உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வெள்ள காலங்களில் ஆற்றில் அதிக தண்ணீர் செல்லும்போது கரையில் மண் எடுத்த பகுதியில் உடைப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

கொள்ளிடம் கூட்டு குடிநீர் பைப் கொண்டு செல்ல ஆற்றின் நடுவே அணை போடுவதற்கு ஆற்றின் கரையில் மண் எடுப்பதற்கு ஒப்பந்ததாரர்களுக்கு யார் அனுமதி கொடுத்தார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. மண் எடுத்த பகுதியில் ஆற்றின் கரை உடைந்து அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்கு முன், ஆற்றின் கரையில் மண் நிரப்பி கரையை பலப்படுத்த வேண்டும். யார் அனுமதி பெற்று ஆற்றின் கரையில் மண்ணை எடுத்தார்கள் என விசாரணை நடத்தி மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : administration ,Suraksha District ,Surakakudu Ubannadhu River ,
× RELATED கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்கு...