×

எலக்ட்ரானிக் லாக்கர் விற்பனை அமோகம் பழைய பூட்டுகள் பழுது தொழில் முடங்கியது வெளிமாவட்டங்களுக்கு வேலை தேடி செல்லும் அவலம்

டெல்டா மாவட்டத்தில் அனைத்து சிறு நகரங்கள் முதல் பெரும் நகரங்கள் மற்றும் பேரூராட்சி, நகராட்சி பகுதிகளில் உள்ள பேருந்து நிலையங்கள், அதிகம் வர்த்தகம்  நடக்கும் பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் பழைய பூட்டுகள் பழுது ஏற்பட்டால் அதனை சரிசெய்யும் தொழிலில் பலர் ஈடுபட்டு வந்தனர். இவர்கள் 50க்கும் மேற்பட்ட சாவிகள் வைத்திருப்பார்கள். பழுது ஏற்பட்ட பூட்டை கொடுத்தால் எந்த சாவி சேர்கிறதோ அந்த சாவி போல் புதிதாக சாவி தயார் செய்து கொடுப்பார்கள். இதனால்  இவர்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.500 வரை வருமானம் கிடைத்தது. மேலும் பூட்டில் சிறிய உபகரணங்கள் போய் விட்டால் அதனை மாற்றி பழையபடி அதனை இயங்க செய்வது உள்ளிட்ட பணிகளில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். இந்த தொழிலில் மூலம் பல ஆயிரம் வர்த்தகம் நடை பெற்றது. இதனால் தொழிலில் ஈடுபடு வோர் களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது.

இந்நிலையில் பல்வேறு வீடுகள், வணிக நிறுவனங்களில் பூட்டை உடைத்து கொள்ளை சம்பவ ங்கள் அதிகரிக்க தொடங்கியது. இதனால் வர்த்தகர்கள், வியாபாரிகள், பொது மக்கள் பெரிய அளவில் பாதிப்படைந்து வந்தனர். அபோது எலக்டானிக் லாக்கர்( மின்னணு பூட்டு) தமிழக சந்தைகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் சில முக்கிய கார்பரேட் கம்பெனிகள் களம் இறங்கியது. இந்த எலெக்ட்ரானிக் லாக்கர் பொருத்தப்பட்டால் பூட்டை உடைக்க முற்படும் போது அலாரம் அடிப்பது உள்ளிட்ட சமிக்ஞை கொடுக்கும். இதனால் திருட்டு சம்பவங்கள் தடுக்கப்பட்டது. இந்த முறையை பொது மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி விற்பனையை அதிகரித்தது.


குறிப்பாக நகைக்கடைகள், வங்கிகள், நகை அடகு கடைகள் உள்ளிட்ட கோடிக்கணக்கில் வர்த் தகம் நடை பெறும் இடங்களில் எலக்ட்ரானிக் லாக்கர்கள் பயன்படுத்த தொடங்கினர். தற்போது சந்தையில் ரூ.3ஆயிரத்து 500முதல் தரத்திற்கு ஏற்றார்போல் ரூ.5ஆயிரம், ரூ.10ஆயிரம், ரூ.15 ஆயிரம் உள்ளிட்ட பல விலைகளில் எலக்ட்ரானிக் லாக்கர்கள் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் குறைந்த விலையில் தரமான புதிய பூட்டுகள் சந்தைகளில் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் தற்போது பொதுமக்கள் பூட்டு பழுதானால் அதனை சரி செய்யாமல் புதிய பூட்டுகளை வாங்கி பயன் படுத்துகின்றனர். இதனால் பூட்டு பழுது நீக்கும் தொழில் படிப்படியாக பாதிப்படைய தொடங்கியது. இதனால் இந்த தொழிலில் ஈடுபட்டவர்களுக்கு  தற்போது வருமானம் இல்லாததால் இந்த தொழிலை விட்டு வெளியேறி வருகின்றனர். குறிப்பாக மாவட்டத்தில் பெரு வாரியான சிறிய நகரங்களில் ஒருவர் கூட இந்த தொழிலில் இல்லை. ஒரு சில இடங் களில் ஒரு சிலர் இந்த தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.  


இந்த தொழிலில் ஈடுபட்டு வருபவர்கள் கூறியதாவது: பொதுமக்கள் குறைந்த விலையில் வாங் கப்படும் பூட்டுகள் பழுது ஏற்பட்டால் அதனை சரிசெய்யாமல் புதிய பூட்டுகளை வாங்கு கின்ற னர். மேலும் கொலை கொள்ளை அதிகரிப்பால் வணிக நிறுவனங்கள் எலக்டாரானிக் பூட்டுகளை வாங்குகின்றனர். அதில் பழுது ஏற்பட்டால் எந்த நிறுவனத்திடம் வாங்கினார்களே அவர்களே வந்து சரி செய்து கொடுத்து விடுகின்றனர். இதனால் எங்களிடம் வர தேவையில்லை. அப்படியே எங்களிடம் வந்தாலும் எங்களுக்கு அதனை சரி செய்ய போதிய தொழில் அறிவு இல்லை. இப்படி பல காரணங்களால் பூட்டு பழுது நீக்கும் தொழில் முற்றிலும் பாதிப்படைந்து விட்டது. மேலும் ஒரு பூட்டை சரிசெய்து கொடுத்து புதிதாக சாவி தயாரித்து கொடுத்தால் ரூ.100லில் இருந்து ரூ.150வரை பணம் கொடுத்தால் தான் கட்டு படியாகும்.  அந்த பணத்தை வாடிக்கையாளர்களிடம் கேட்கும் போது. இந்த பணத்திற்கு ஒரு புதிய பூட்டை வாங்கிவிடலாம் என்று தெரிவித்து விட்டு பழுநீக்க மறுத்து புதிய பூட்டு வாங்கி செல்கின்றனர்.  இதனால் இந்த தொழிலில் இருந்து வெளியேறி பிழைப்பிற்காக மாற்று தொழிலை நாடி சென்று விட்டனர். குறிப்பாக திருப்பூர், சென்னை, கோயம்புத்துார் ஆகிய தொழில் நகரங்களுக்கு பிழை ப்பை தேடி சென்று விட்டனர். ஒரு சிலர் குடும்ப சூழ்நிலை காரணாக வெளியூர் செல்லாமல் இந்த தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களும் போதிய வருமானம் இன்றி செய்து வருகி ன்றனர் என்றனர்.

Tags :
× RELATED கோடை வெயில் சுட்டெரிப்பதால் இளநீர்,...