×

க.பரமத்தி ஒன்றியத்தில் தீவிர பிரசாரம் அனைத்து வீடுகளுக்கும் சுகாதாரமான காவிரி குடிநீர் வழங்கப்படும் திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி உறுதி

க.பரமத்தி, மே14:  அனைத்து வீடுகளுக்கும் சுகாதாரமான காவிரிகுடிநீர் வழங்கப்படும் என திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி க.பரமத்தி ஒன்றியத்தில் பிரசாரத்தின் போது உறுதியளித்தார். அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட குக்கிராமங்கள் தங்களது ஆதரவாளர்கள் கட்சி நிர்வாகிகளோடு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்து வருகிறார்.  நேற்று க.பரமத்தி ஒன்றிய பகுதி அத்திப்பாளையம், ஆரியூர், கூடலூர்மேற்கு ஆகிய மூன்று ஊராட்சிகளுக்குட்பட்ட குக்கிராமங்கள் முழுவதும் வீதி வீதியாக சென்று அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி வாக்கு சேகரித்தார். சென்ற இடங்களில் பெண்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றனர். பிறகு உதயசூரியனுக்கு தான் வாக்களிப்போம் என உறுதியளித்தனர்.அவருடன் மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி, க.பரமத்தி ஒன்றிய செயலாளர் கருணாநிதி, உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் சென்று வாக்கு சேகரித்தனர்.வேட்பாளர் செந்தில்பாலாஜி பேசுகையில், நொய்யல் நீர் தேக்க அணையால் பாதிக்கப்பட்ட விளை நிலங்களுக்கும் உயர் மின் கோபுரங்களால் பாதிக்கப்படும் நிலத்திற்கும் உரிய  இழப்பீட்டு பெற்று தரப்படும். அத்தோடு நொய்யல் நீர் தேக்க அணையையே நம்பியுள்ள விளை நிலங்களுக்கு விவசாயத்திற்கு தகுந்த நீரை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். தொகுதிக்குட்பட்ட  ஊராட்சி பேரூராட்சிகள் என அனைத்து கிராமங்களுக்கும் காவிரி குடிநீரை சுத்திகரிப்பு இயந்திரம் மூலம் சுத்திகரிக்கப்பட்டு சுகாதாரமான குடிநீர் அனைத்து வீடுகளுக்கு வழங்கப்படும்.

 விலைவாசி உயர்வுக்கு  மோடியும்,எடப்பாடிபழனிச்சாமி ஆகியோர் தான் காரணம்.உயர்ந்த விலைவாசியினை குறைக்க   உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற வைத்து திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக வேண்டும்.நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை 100சதவீதம் பொறுப்பெடுத்து நன்றி விசுவாசத்தோடு பொதுமக்களுக்கு நிறைவேற்றுவோம். எனவே சிந்தித்து உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்றார்.இதில் மாவட்ட, ஒன்றிய, நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், கிளை  நிர்வாகிகள் முன்னாள், இன்னாள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : Senthilalaji ,DMK ,houses ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி