×

குளித்தலை மகா மாரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா துவங்கியது 21ம்தேதி தேரோட்டம்

குளித்தலை, மே 14:  குளித்தலை மகாமாரியம்மன்கோயில் சித்திரை திருவிழா துவங்கியது. வருகிற 21ம்தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. கரூர் மாவட்டம் குளித்தலை மகா மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் சித்திரை திருவிழாவையொட்டி கடந்த 5ம் தேதி பூச்சொரிதல் மற்றும் கம்பம் நடும்விழா நடைபெற்றது. இவ்விழாவினை தொடர்ந்து நேற்று (12ம் தேதி) மாலை உற்சவ மாரியம்மன் கடம்பர் கோயிலில் இருந்து அழைத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.  தொடர்ந்து தினந்தோறும் மண்டகப்படிதாரர்கள் மாரியம்மனை வைத்து அபிஷேகம் செய்து இரவு தேரோடும் வீதியில் வீதிஉலா நிகழ்ச்சி நடைபெறும். வரும் 19ம்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை முக்கிய நிகழ்வான பெரியபால்குடம், அன்றிரவு அரண்மனை மாவிளக்கு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. வருகிற 21ம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணிக்கு மேல் மாரியம்மன் கோயில் தேரோட்டம் நடைபெறுகிறது. மதியம் 2.30 மணிக்குமேல் தீமிதி நிகழ்ச்சி நடைபெறுகிறது. வருகிற 23ம் தேதி ஊட்டத்தூர் வெள்ளாளர் மண்டகபடி சார்பில் அம்மன் முத்து பல்லக்கில் வீதிஉலா நடைபெறுகிறது. வருகிற 24ம் தேதி காலை மஞ்சள் நீராட்டும் விழா, மாலை 6 மணிக்கு மேல் கம்பம் ஆற்றில் விடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாட்டினை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

Tags : Chithirathil Maha Mariamman Temple ,
× RELATED மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில்...