×

மலேசியாவில் இருந்து கடத்தி வந்த ரூ.16 லட்சம் தங்கம் ஏர்போர்ட்டில் பறிமுதல் சிக்கிய இருவரிடம் விசாரணை

ஏர்போர்ட், மே 10:  மலேசியாவில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் ரூ.16 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு நாள்தோறும் சிங்கப்பூர், மலேசியா, ,துபாய், இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து விமானங்கள் வருவதும், இங்கிருந்து பல நாடுகளுக்கு விமானங்கள் செல்வதும் வழக்கம். அதில் வரும் பயணிகளையும் இங்கிருந்து செல்லும் பயணிகளையும் விமான நிலைய மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்வது வழக்கம். சோதனையில் வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரும் கடத்தல் தங்கங்கள், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் போன்றவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
 
இந்நிலையில் திருச்சி விமான நிலையத்திற்கு நேற்று முன்தினம் இரவு மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா விமானம் ஒன்று வந்தது. அதில் வந்த பயணிகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது அதில்  வந்த சென்னையை சேர்ந்த முகம்மது நவாஸ்ஷெரீப் என்பவரின்  உடமைகளை சோதனை செய்தனர். அப்போது அவர் 332 கிராம் 7,90,000 மதிப்புள்ள தங்கத்தை ஆசனவாயில் மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. உடனடியாக அவரிடமிருந்து  தங்கத்தை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இதேபோல் அதே விமானத்தில் வந்த சென்னையை சேர்ந்த பைசூல் கரணி என்பவரின் உடமைகளை சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அவர் 329 கிராம் 7,86,000 மதிப்புள்ள தங்கத்தை ஆசனவாயில் மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது உடனடியாக அவரிடமிருந்து  கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்து தொடர்ந்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

Tags : Malaysia ,
× RELATED மலேசியாவில் கடற்படை ஒத்திகையின்போது...