×

துறையூர் அருகே ஜல்லிகள் பெயர்ந்து சேதமடைந்த தார் சாலை வாகனங்கள் பழுதாகும் அவலம்

துறையூர், மே 10:  துறையூர் அருகே கொல்லப்பட்டியிலிருந்து கெம்பியாம்பட்டி செல்லும் தார்சாலையில் ஜல்லிகள் பெயர்ந்து குண்டும், குழியுமாக சேதமடைந்துள்ளது. இந்த சாலை வழியாக தா,பேட்டையிலிருந்து துறையூர் வருவதற்கு குறுக்கு சாலையாகும். இந்த சாலை வழியாக காவேரிப்பட்டி, வீரமச்சான்பட்டி, குரும்பப்பட்டி உள்ளிட்ட பல கிராமங்களிலிருந்து 100க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் அனைவரும் இந்த சாலையில்தான் வந்து செல்வார்கள். கடந்த ஓராண்டுக்கும் மேலாகவே இந்த சாலை குண்டும், குழியுமாகவே உள்ளது. இதனால் வாகனங்கள் பழுதடைகின்றன. இரவு நேரத்தில் இருசக்கரவாகன ஓட்டிகள் கீழே விழுந்து விபத்துக்கள் ஏற்படுகின்றன இதைப்பற்றி புகார் அளித்தும் எந்த அதிகாரியும் கண்டுகொள்ளவில்லை.

பொதுவாக கிராமப்புறச்சாலை அமைக்கும் போது பெரிய ஜல்லிகளை அதிகமாக பயன்படுத்தி சின்ன ஜல்லியை மேலே பிளேடு கணத்தில் தார்சாலை போடப்படுவதால் அடிக்கடி சாலை போட வேண்டியுள்ளது. சாலையின் தன்மையை எந்த அதிகாரியும் நேரில் சென்று பார்ப்பதில்லை. அதனால் தான் ஒப்பந்ததார்கள் கடமைக்கு தார்சாலை போடப்படுவதால் அதன் உழைப்பு ஓரிரு வருடத்தில் சாலைகள் குண்டும், குழியுமாக மாறிவிடுகிறது. இதுபற்றி சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தரமான சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே கொல்லப்பட்டியிலிருந்து கெம்பியாம்பட்டி செல்லும் தார் சாலையை புதிதாக அமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : roads ,Dural ,Thuraiyur ,dam roads ,
× RELATED பங்குனி உத்திரத்தை ஒட்டி...