×

பட்டுக்கோட்டையில் அரசு கலைக்கல்லூரி அமைக்க வேண்டும் தமிழக அரசுக்கு கோரிக்கை

பட்டுக்கோட்டை, மே 10: பட்டுக்கோட்டையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்க வேண்டுமென தமிழக அரசுக்கு மக்கள் பாதுகாப்பு பேரவை மனு அனுப்பியுள்ளது. தமிழக அரசுக்கு மக்கள் பாதுகாப்பு பேரவை மாநில தலைவர் பாலசுப்பிரமணியன் கோரிக்கை மனு அனுப்பினார். அதில் பட்டுக்கோட்டை மற்றும் சுற்றியுள்ள 100க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் ஒவ்வொரு ஆண்டும் வெளியூர், வெளிமாவட்டங்களுக்கும் கல்லூரிகளில் படிப்பதற்காக செல்கின்றனர்.

இதனால் அவர்களுக்கு அலைச்சலும், மனஉளைச்சலும் ஏற்படுவதோடு அதிக பொருட்செலவும் ஏற்படுகிறது. எனவே  பட்டுக்கோட்டையிலேயே அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைந்துவிட்டால் உயர்கல்வி படிப்பதற்கு எளிதாக இருக்கும். எனவே தமிழக முதல்வர் வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் பட்டுக்கோட்டையில் அரசு மற்றும் கலை அறிவியல் கல்லூரி அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்து உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : government ,state art college ,Pattukottai ,
× RELATED நாடு முழுவதும் மேலும் 10,000...