×

போலி கொரோனா பரிசோதனை கூடம் நடத்தி தமிழக பக்தர்களிடம் ஆயிரக்கணக்கில் பணம் வசூல்: சபரிமலையில் பரபரப்பு

திருவனந்தபுரம்: சபரிமலையில் தரிசனம் செய்யும் பக்தர்கள் கடந்த 26ம் தேதிவரை கொரோனாவுக்கு ஆன்டிஜன் பரிசோதனை நடத்தினால் போதுமானதாக இருந்தது. இந்த நிலையில் மகரவிளக்கு பூஜை தொடங்கும் 31ம் தேதிமுதல் பக்தர்கள் 48 மணி நேரத்துக்குள் எடுக்கப்பட்ட ஆடி-பிசிஆர், ஆர்டி ேலம்ப், எக்ஸ்பிரஸ் நாட் போன்ற பரிசோதனை சான்றிதழை காண்பிக்க வேண்டும். ஆடி-பிசிஆர் பரிசோதனை செய்ய குறைந்த பட்சம் ரூ2,500 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த பரிசோதனையை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் (ஐசிஎம்ஆர்) அனுமதியுடன் மட்டுமே நடத்த வேண்டும். சபரிமலை பக்தர்கள் வசதிக்காக நிலக்கல் பகுதியில் ஆன்டிஜன் பரிசோதனை வசதி ஏற்படுத்தப்பட்டிருந்தது. ஆனால் ஆர்டி-பிசிஆர் பரிசோதனைக்கு நிலக்கலில் பரிசோதனை கூடம் அமைக்கப்படவில்லை என திருவிதாங்கூர் தேவஸம்போர்டு ஏற்கனவே ெதரிவித்திருந்தது. கோட்டயம், பத்தனம்திட்டா உட்பட முக்கிய இடங்களில் மட்டுமே ஆர்டி-பிசிஆர் பரிசோதனை கூடங்கள் உள்ளன. மேலும் இதற்கான முடிவு கிடைப்பதற்கு குறைந்தது 2 நாட்களாவது ஆகும். இந்த நிலையில் நேற்று தமிழகத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பக்தர்கள், நிலக்கலில் பரிசோதனை கூடம் இருக்கும் என நம்பி வந்தனர். ஆனால் அங்கு அதற்கான வசதி இல்லாததால் போலீசார் அவர்களை திருப்பி அனுப்பினர். இந்த நிலையில் நிலக்கல் பகுதியில் கோட்டயத்தை சேர்ந்த ஒரு தனியார் பரிசோதனை கூடம் அமைக்கப்பட்டிருந்தது. இதனால் பக்தர்கள் அங்கு சென்று பரிசோதனை ெசய்தனர். அதற்கு கட்டணமாக ரூ2,500 வசூலித்துள்ளனர். பின்னர் அவர்கள் வழங்கிய சான்றிதழ்களுடன் பக்தர்கள் தரிசனத்துக்கு சென்றனர். ஆனால் அங்கு சுகாதாரத்துறையினர் சான்றிதழை பரிசோதித்தபோது அது போலி என தெரியவந்தது. இதனால் பக்தர்களை தரிசனத்துக்கு அனுமதிக்க மறுத்து விட்டனர். இதுகுறித்து நிலக்கல் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. போலீசார், அந்த பரிசோதனை கூடத்துக்கு சென்று விசாரித்தபோது ஐசிஎம்ஆர் அனுமதி இல்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கு பணிபுரிந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்….

The post போலி கொரோனா பரிசோதனை கூடம் நடத்தி தமிழக பக்தர்களிடம் ஆயிரக்கணக்கில் பணம் வசூல்: சபரிமலையில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Sabarimalai ,Thiruvananthapuram ,Corona Examination Gym ,Sabarimala ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...