×

பிளஸ்1 பொதுத்தேர்வில் ஏஆர்ஆர் மெட்ரிக் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி

கும்பகோணம், மே 10: பிளஸ்1 வகுப்பு பொதுத்தேர்வில் கும்பகோணம் ஏஆர்ஆர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி  பெற்றுள்ளது. தேர்வு எழுதிய 152 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் அன்புமொழி, நிவேதா வெங்கடேஷ் ஆகியோர் 551 மதிப்பெண் பெற்று முதலிடமும், மாணவர் தேஜ்ராஜ் 535 மதிப்பெண் பெற்று இரண்டாமிடமும்,  மாணவி உமா மகேஸ்வரி 525 மதிப்பெண் பெற்று மூன்றாமிடமும் பிடித்தனர். சாதனை படைத்த மாணவர்கள், உறுதுணையாக இருந்த ஆசிரியர்கள் பள்ளி தாளாளர்  சுப்ரமணியம், செயலாளர், அறக்கட்டளை நிர்வாக உறுப்பினர், முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் பாராட்டினர்.

Tags : ARR Matriculation School ,
× RELATED விவசாயிகள் வலியுறுத்தல் தஞ்சாவூரில் வாகனம் மோதி மூதாட்டி உயிரிழப்பு