×

கெங்கவல்லி அருகே மாரியம்மன் தேர்திருவிழா

கெங்கவல்லி, மே 10: கெங்கவல்லி அருகே புனல்வாசல் கிராமத்தில்  மகாசக்தி மாரியம்மன் கோயிலில் தேர் திருவிழா கடந்த மாதம் 30ம் தேதி தொடங்கியது. நிகழ்ச்சியில் கடந்த 5ம் தேதி பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியும், 7ம் தேதி காத்தவராயன் சுவாமிக்கு ஆரியமாலை மற்றும் அம்மன் திருக்கல்யாணமும் நடந்தது. இதனைத்தொடர்ந்து, நேற்று மதியம்  மகாசக்தி மாரியம்மன் கோயிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட தேர் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு முக்கிய வீதிகள் வழியாக தேரை வடம் இடித்து இழுத்து சென்றனர். இவ்விழாவில் புனல்வாசல் சுற்று வட்டாரத்தில் உள்ள கிராமங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆத்தூர் டிஎஸ்பி ராஜூ தலைமையிலான போலீசார் செய்திருந்தனர்.

Tags : Mariamman ,election festival ,Kangavalli ,
× RELATED தேர்தல் திருவிழாவில் ருசிகரம்!:...