சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வில் எஸ்கேவி வித்யாஷ்ரம் பள்ளி சாதனை

திருச்செங்கோடு, மே10: மத்திய அரசின் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத்தோ–்வில், கந்தம்பாளையம்எஸ்கேவி வித்யாஷ்ரம் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் 490, 489 மற்றும் 488 மதிப்பெண்கள் பெற்று 100 சதவீதம் தோ்ச்சியடைந்துள்ளனர். வெற்றி பெற்ற மாணவா–்களை பள்ளியின் தலைவா் கோல்டன் ஹார்ஸ்  ரவி, பொருளாளா் டாக்டர் பாலசுப்ரமணியன் ஆகியோர் பாராட்டி வாழ்த்தினர்.

இப்பள்ளியின் மாணவ, மாணவிகள் 2 பேர் 490 மதிப்பெண்ணும், 4 பேர் 489 மதிப்பெண்ணும், ஒருவர் 488 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனா். 480 மதிப்பெண்களுக்குமேல் 11 பேரும், 450க்கு மேல் 27 பேரும், 400க்கு மேல் 34 பேரும் மதிப்பெண்கள் பெற்று சிறப்பு நிலை தகுதித் தோ்ச்சி பெற்றுள்ளனர்.தவிர கணிதப்பாடத்தில் 5 பேரும், சமூக அறிவியலில் 3 பேரும், அறிவியலில் ஒருவரும் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். மேலும், ஆங்கிலம் மற்றும் தமிழ் பாடத்தில் அதிகபட்ச  மதிப்பெண்களாக 99 மதிப்பெண்கள்  பெற்றுள்ளனா்.

Related Stories:

>