×

தர்மபுரி பகுதியில் சம்பங்கி விதை கிழங்கு விற்பனை ேஜார்

தர்மபுரி, மே 10: தர்மபுரியில் சம்பங்கி பூக்களுக்கான விதைக்கிழங்கினை தரம் பிரித்து கிலோ ₹27 முதல் ₹30க்கு விற்பனை செய்யப்படுகிறது. தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி, நல்லம்பள்ளி, காரிமங்கலம், பென்னாகரம், பாலக்கோடு, மொரப்பூர், பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதியில் 1400 ஏக்கரில் சம்பங்கி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சம்பங்கி விதை கிழங்கினை நடுவதன் மூலம் 6 மாதத்தில் அறுவடைக்கு வருகிறது. ஏக்கருக்கு சுமார் 5 முதல் 6 டன் பூக்கள் மகசூல் கிடைக்கிறது. ஆண்டு முழுவதும் சீரான விலையில் சம்பங்கி பூ மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ஒரு கிலோ ₹40 முதல் ₹60 வரையிலும் விற்பனை செய்யப்பட்டது.மாவட்டத்தில் கோடை மழையை எதிர்நோக்கி உழவு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. கோடை உழவுக்கு பின்பு சொட்டுநீர் பாசனத்தில் சம்பங்கி சாகுபடிக்கு விவசாயிகள் முனைப்பு காட்டியுள்ளனர். இதற்காக விதைக்கிழங்கு வாங்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தர்மபுரி முத்துக்கவுண்டன் கொட்டாய் கிராமத்தில் சம்பங்கி விதைக்கிழங்கு தரம் பிரித்து விற்பனை செய்து வருகின்றனர். கிலோ ₹27 முதல் ₹30க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், சம்பங்கி சாகுபடி செய்ய விவசாயிகள் விதைக்கிழங்கை ஆர்வமாக வாங்கிச் செல்கின்றனர். விதைக்கிழங்கை நேருக்கு நேராக நடவு செய்யாமல், ஜிக்ஜாக் முறையில் நடவு செய்ய வேண்டும். நேருக்கு நேர் நடவு செய்யும்போது, செடிகள் ஒன்றோடொன்று மோதி வளர்ச்சி குறையும். முக்கோண நடவு செய்யும்போது, நிலம் முழுவதும் செடிகள் அடர்ந்து வரும். பாசனத்துக்கும் தடை இருக்காது. ஏக்கருக்கு 300 கிலோ விதை தேவைப்படும். எல்லா வகை மண்ணிலும் பொதுவாக வடிகால் வசதி உள்ள மண்ணில் வளரக் கூடியது. நட்ட 3 மாதங்களில், ஒரு சில இடங்களில் அங்கொன்றும் இங்கொன்றும் பூ வரும். 9 மாதத்தில் மகசூல் குறையும். ஏக்கருக்கு சுமார் 3 முதல் 5 டன் பூ மகசூல் கிடைக்கும் என்றனர்.


Tags : area ,Dharmapuri ,
× RELATED வாட்டி வதைக்கும்...