×

தர்மபுரியில் அரசு-வேம்பு திருமணம்

தர்மபுரி, மே 10: தர்மபுரியில் அரசமரத்திற்கும்-வேப்பமரத்திற்கும் திருமண வைபவம் நேற்று நடந்தது.தர்மபுரி டவுன் சித்தலிங்கேஸ்வரர் கோயிலில் நேற்று முன்தினம் காலை அரசமரத்திற்கும்-வேப்பமரத்திற்கும் திருமண விழா நடந்தது. இதனையொட்டி 7ம் தேதி மாலை 6 மணிக்கு கணபதி பூஜை, கங்கணம் கட்டுதல் நடந்தது. நேற்று அதிகாலை 5 மணிக்கு சிறப்பு ஹோமம் நடந்தது. காலை 9 மணிக்கு அரசமரத்திற்கும், வேப்பமரத்திற்கும் மாங்கல்ய பூஜை நடந்தது. இதையடுத்து மகா தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நடந்தது. காலை 11 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags : state ,Dharmapuri ,
× RELATED வாக்களிக்க சொந்த ஊருக்கு சென்ற...