×

பொம்மிடி அருகே வேப்பாடி ஆற்றின் குறுக்கே அணை

பாப்பிரெட்டிப்பட்டி, மே 10: பொம்மிடி அருகே வேப்பாடி ஆற்றில் அணை கட்ட ேவண்டும் என விவசாயிகள் ேகாரிக்கை விடுத்துள்ளனர்.பொம்மிடி அருகே சேர்வராயன் மலை அடிவாரத்தில், வேப்பாடி ஆறு அமைந்துள்ளது. இந்த ஆற்றின் குறுக்கே அணை கட்ட 1941ம் ஆண்டில் ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால் அணை கட்டமால் தொடர்ந்து மெத்தன ேபாக்கு காட்டி வந்தனர். இந்த அணை கட்டினால் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில், விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், அணை கட்டும் பணி தொடங்காமல் விட்டனர். தடுப்பணை மட்டும் கட்டப்பட்டுள்ளதால், மழை காலங்களில் சேகரமாகும் தண்ணீர் அனைத்து வீணாகி வருகிறது. இப்பகுதியில் அணை கட்டினால், விவசாய நிலங்களும், எஸ். பாளையம், கோட்டமேடு, நடூர், துறிஞ்சப்பட்டி, பொம்மிடி, பள்ளிப்பட்டி, பில்பருத்தி உள்ளிட்ட பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் இருக்கும். என விவசாயிகள் கோரிக்கையை ஏற்று, இப்பகுதியில் அணை கட்டும் பணியை தொடங்க ேவண்டும் என விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags : Dam ,river ,Veppadi ,Pommyadi ,
× RELATED பைக்காரா அணையின் நீர்மட்டம் சரிவு ; படகு சவாரிக்கு 100 படிகள் இறங்க வேண்டும்