×

ராஜகிரி பெரியகுளத்தில் கருவேல மரங்களை அகற்ற வேண்டும் விவசாயிகள் கோரிக்கை

விராலிமலை,மே 10: விராலிமலை அருகே ராஜகிரி பெரியகுளத்தில் உள்ள கருவேல மரங்களை அகற்றி குடிமராமத்து பணிகள் மேற்கொள்ள வேண்டும் என இப்பகுதி  விவசாயிகள்  அரசுக்கு  கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை இலுப்பூர் சாலையில் உள்ள ராஜகிரி பெரியகுளம் 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட  பாசனக்குளம் ஆகும். பொதுப்பணித்துறை நிர்வாகத்தின் கீழ் இக்குளம் உள்ளது. இந்த குளத்தின் மூலம் 200க்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசனம் பெறுகின்றன. கடந்த சில வருடங்களாக இப்பகுதியில் மழை பெய்யாததால் குளம் வறண்டு கிடக்கிறது. குளம் மராமத்து பணிகள் செய்யப்படாததால் குளத்தை கருவேல மரங்கள் ஆக்கிரமித்து புதர் போல் காட்சி அளிக்கிறது. குளத்தில்  சிறிதளவு  கூட தண்ணீர் இல்லாததால் கால்நடைகள் வளர்ப்பு மிகவும் பாதிப்படைந்துள்ளது.

இது குறித்து  இந்த பகுதியை சேர்ந்த விவசாயிகளிடம் கேட்ட போது,  இரண்டு வருடங்களுக்கு முன்பு உயர்நீதி மன்ற கிளை உத்தரவின் பேரில் இந்த குளத்தில் இருந்த சீமை கருவை மரங்கள் வெட்டப்பட்டன. இதன் வேர்கள் முற்றிலும் அகற்றப்படவில்லை. இதனால் மரங்களில் கூடுதலாக கிளைகள் தோன்றி புதர் போல் காட்சி அளிக்கிறது.  குளத்தின்  ஓரங்களில் இருந்த கருவேல மரங்கள் பெருகி குளத்தின் மைய பகுதியில் முளைக்க துவங்கியுள்ளது. ஊராட்சி ஒன்றியத்தின் மூலம்  தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலம் குளத்திற்கு தண்ணீர் வரும் வரத்து வாரிகள் சீரமைக்கபட்டு உள்ளன.

இந்நிலையில் குளத்தில் மழைக்காலங்களில் பெய்யும் மழை நீரை தேக்கி வைத்து விவசாயம் செய்ய  மழைக்காலம் துவங்கும்  முன் குளங்களில் உள்ள சீமைக்கருவை மரங்களை வேருடன் அகற்றி குளத்தை குடிமாரமத்து பணிகள் செய்து குளத்தை சீரமைக்க வேண்டும். என்பதே இப் பகுதி மக்களிள் கோரிக்கையாகும் என்றனர்.

Tags : Rajagiri Periyakulam ,
× RELATED பொன்னமராவதி அருகே செம்பூதியில் கால்நடை மருத்துவ விழிப்புணர்வு முகாம்