கறம்பக்குடி அருகே தந்தை திட்டியதால் மகன் தற்கொலை

கறம்பக்குடி, மே 10: கறம்பக்குடி அருகே வேலைக்கு செல்லாததால் தந்தை திட்டியதால் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
கறம்பக்குடி  அருகே விலாறிப்பட்டியை சேர்ந்தவர் அய்யாசாமி. இவரது மகன் முருகேசன் (35).  கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக முருகேசன் குடி பழக்கத்துக்கு  அடிமையாகி எந்த  வேலைக்கும்  செல்லாமல் இருந்து வந்துள்ளார். இதனால் முருகேசனை அவரது தந்தை  அய்யாசாமி திட்டினார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட முருகேசன், வீட்டில்  இருந்த பூச்சி மருந்தை சாப்பிட்டு மயங்கிய நிலையில் கடந்தார். இதையடுத்து  அவரை ஆபத்தான நிலையில் மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்  சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து கறம்பக்குடி  போலீசில் அய்யாசாமி புகார் செய்தார். இன்ஸ்பெக்டர்  வழக்குப்பதிந்து  விசாரணை நடத்தி வருகிறார்.

Tags : suicide ,Karambukudi ,
× RELATED மாதவரத்தில் பரபரப்பு 2வது மாடியில்...