×

மாணவர்கள், தனித்தேர்வர்கள் 11ம் வகுப்பு தேர்வு விடைத்தாள் நகல் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் 3 நாள் அவகாசம்

பெரம்பலூர், மே 10: பெரம்பலூர் மாவட்டத்தில் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி முடித்தவர்கள் விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு இன்று(10ம்தேதி) முதல் 13ம் தேதிவரை விண்ணப்பிக்கலாம் என பெரம்பலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அருளரங்கன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது: கடந்த மார்ச் மாதம் 11ம் வகுப்பு  பொதுத்தேர்வு எழுதியவர்களுக்கு கடந்த 8ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதைத்தொடர்ந்து பள்ளி மாணவர்களாக அல்லது தேர்வு மையத்தில் தனித்தேர்வர்களாக தேர்வு எழுதியோர் விடைத்தாள் நகல் கோரியோ அல்லது மதிப்பெண் மறுகூட்டல் கேட்டோ விண்ணப்பிக்க விரும்பினால் இன்று (10ம்தேதி) பிற்பகல் முதல் நாளை (11ம் தேதி) மற்றும் 13ம் தேதி ஆகிய நாட்களில் விண்ணப்பிக்க கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

இதற்காக விண்ணப்பங்களைப் பதிவு செய்ய விரும்பும் பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளி வழியாகவும் தனித்தேர்வர்கள் அவர்கள் தேர்வு எழுதிய தேர்வு மையங்கள் வழியாகவும் ஆன்லைனில் தங்கள் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது. இதற்காக ஆன்லைனில் பதிவேற்றம்  செய்திட அந்தந்தப் பள்ளித் தலைமை ஆசிரி யர்கள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

www.dge.tn.gov.in < http://www.dge.tn.gov.in/ > என்ற இணைய தளத்திற்குச் சென்று, click to access to online portal என்ற வாசகத்தினை கிளிக்செய்து திரையில் தோன்றும் HS First Year Examination March/April 2019 RT-1 application for Regist ration என்ற தலைப்பினைக் கிளிக் செய்து, யூசர் ஐடி, பாஸ்வேர்டைப் பதிவு செய்த பின்னர் திரையில் தோன்றும் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, தேவைப்படும் நகல்களை எடு த்துக்கொள்ள வேண்டும்.

இதன்படி விடைத்தாளின் நகல் பெற விண்ணப்பிக்க கட்டணமாக ஒவ்வொரு பாடத்திற்கும் ரூ275ம், மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கக் கட்டணமாக, உயிரியல் படத்திற்கு மட்டும் ரூ305ம், ஏனைய பாடங்கள் ஒவ்வொன்றுக்கும் ரூ.205ம் செலுத்த வேண்டும். விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பிக்கும் படங்களுக்கு தற்போது மறுகூட்டலுக்கோ அல்லது மறுமதிப்பீட்டிற்கோ விண்ணப்பிக்க கூடாது. விடைத்தாள் நகல் பெற்ற பின்னரே மதிப்பெண் மறுகூட்டலுக்கு, மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்படும். விடைத்தாள் நகல் தேவையில்லையெனில் மாணவர்கள் விரும்பினால் மறு கூட்டலுக்குத் தற்போது விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

மதிப்பெண் பட்டியல்:
வருகிற 14ம் தேதி செவ்வாய்க்கிழமை பிற்பகல் முதல், தேர்வு எழுதிய மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளில் அல்லது தேர்வு எழுதிய மையத்தில் தலைமையாசிரியர் வழியாக தங்களது மதிப்பெண் பட்டியலைப் பெற்றுக் கொள்ளலாம். வருகிற 16ம்தேதி வியாழக்கிழமை பிற்பகல் முதல் பள்ளி மாண வர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் தங்களுக்கான மதிப்பெண் பட்டியலை, தங்களது பிறந்த தேதி, பதிவு எண் ஆகிய விவரங்களை அளித்து www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் தாங்களே பதிவி றக்கம் செய்து கொள்ளலாம். மதிப்பெண்பட்டியலில் பள்ளி மாணாக்கர்களுக்கு சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமையாசிரியரும், தனித்தேர்வர்களுக்கு தேர்வு எழுதிய தேர்வு மையத்தின் பள்ளி தலைமையாசிரியரும் சான்றொப்பமிட்டிருந்தால் மட்டுமே மதிப்பெண் பட்டியல்செல்லும் எனவும் தெரிவித்துள்ளார்.

Tags : Universities ,class examination ,
× RELATED உலக அளவில் முதல் 200 பல்கலைக்கழகங்களில்...