×

மருதூர் கிராமத்தில் சேதமடைந்து கிடக்கும் சுகாதார வளாகம் சீரமைக்க கோரிக்கை

ஜெயங்கொண்டம், மே 10:  ஜெயங்கொண்டம் அருகே பராமரிப்பின்றி சேதமடைந்து வரும் ஆரம்ப சுகாதார வளாகம் சீரமைக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஜெயங்கொண்டம் அருகில் உள்ள ஆண்டிமடம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மருதூர் கிராமத்தில் தென்பகுதியில் மாநில நிதிக்குழு மானியம் திட்டத்தின் கீழ் கடந்த 2012-2013ம் ஆண்டில் ஆண்கள் சுகாதார வளாகம் ரூ.6 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டது. இந்த சுகாதார வளாகம் தற்போது பராமரிக்க ஆட்கள் இன்றி சிதைந்து வருகின்றது.

இந்த சுகாதார வளாகத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு தனி அறை உட்பட பத்து அறைகள் கழிவறை, குளியலறை உள்ளன. தற்போது இந்த சுகாதார வளாகத்தை பொதுமக்கள் யாரும் பயன்படுத்த முடியாத நிலையில் சிதைந்துள்ளன. மத்திய, மாநில அரசுகள் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத ஊராட்சி என சான்று மற்றும் பரிசுகளும் வழங்கும் நிலையில் இந்த ஊராட்சியிலும் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத ஊராட்சி என பெயர் பலகையும் உள்ளது. ஆனால் ஆண்களுக்கான சுகாதார வளாகத்தை யாரும் பயன்படுத்துவதில்லை. காரணம் அது சிதைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளன. கழிவறைகளில் உள்ள பீங்கான் பைப் போன்றவற்றை சரிசெய்து மக்கள் உபயோகத்திற்கு விட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : health campus ,village ,Maruthur ,
× RELATED கடலூர் அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை...