×

உடல் நலக்குறைவால் உயிரிழந்த ராணுவ வீரரின் உடல் இன்று சொந்த ஊரில் அடக்கம்

அரியலூர், மே 10: டெல்லியில் உடல் நலக்குறைவால் உயிரிழந்த ராணுவ வீரர் பாக்கியராஜின் உடல் அவரது சொந்த ஊரான திருமானூர் அருகேயுள்ள வெற்றியூரில் இன்று மாலை அடக்கம் செய்யப்படுகிறது. அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகேயுள்ள வெற்றியூர் கிராமத்தை சேர்ந்த ஆசிரியர் மூர்த்தியின் மகன் பாக்கியராஜ்( 36). இவர் பி.ஏ வரை படித்துள்ளார், கடந்த 2003ம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்து தற்போது டெல்லியில் பணிபுரிந்து வருகிறார்.

இவருக்கு தீபா என்ற மனைவியும், தியா(7) என்ற மகளும், புகழ்மாறன்(2) என்ற மகனும் உள்ளனர். கடந்த மாதம் 10 நாட்கள் விடுப்பில் ஊருக்கு வந்திருந்த பாக்கியராஜ் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் வாக்களித்து விட்டு ஓரிரு நாட்கள் கழித்து டெல்லி சென்றுவிட்டார்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக உடல் நிலை சரியில்லாமல் ராணுவ மருத்துவமனையில் அவ்வபோது சிகிச்சை பெற்று வந்துள்ளார். நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உடல் இன்று சொந்த ஊரான வெற்றியூருக்கு கொண்டு வரப்படுகிறது. தொடர்ந்து, உறவினர்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு இன்று மாலை உடல் அடக்கம் செய்யப்படுகிறது.

Tags : soldier ,hometown ,
× RELATED காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவத்துடன்...