×

அதிக கட்டணம் வசூலிக்கும் உணவகங்கள், விடுதிகளுக்கு மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை

ஊட்டி, மே 10: கோடை சீசனை முன்னிட்டு ஊட்டி வரும் சுற்றுலா பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்கும் உணவகங்கள் மற்றும் விடுதி உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியிருப்பதாவது: நீலகிரி மாவட்டத்தில் கோடை விழா சீசன் தொடங்கியுள்ளதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இதனை பயன்படுத்தி உணவகங்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் உரிய கட்டணத்திற்கு பதிலாக இரு மடங்கு வசூல் செய்து சுற்றுலா பயணிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்துவதாக தெரியவருகிறது. எனவே உணவகங்கள் மற்றும் தங்கும் விடுதிகளின் உரிமையாளர்கள் அதிக கட்டணம் வசூல் செய்வது தெரியவந்தால் அவர்கள் மீது உாிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் இதுகுறித்து உணவு பாதுகாப்பு அலுவலர் 9442628185, வாட்ஸ் ஆப் புகார் எண் 9943126000,  ஊட்டி நகராட்சி ஆணையாளர் 9444820460 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். இவ்வாறு இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.

Tags : district administration ,hotels ,
× RELATED ஊட்டி மகளிர் தின விழாவில் நடனமாடிய கலெக்டர், டிஆர்ஓ