×

பயணிகள் நிழற்குடை இல்லாததால் பொதுமக்கள் அவதி கொளுத்தும் வெயிலில் காத்து கிடக்கும் அவலம்

செம்பனார்கோவில், மே10:  நாகை மாவட்டம் செம்பனார்கோவில் அடுத்து பரசலூரில் மயிலாடுதுறை -பொறையார் மார்க்கத்திற்கு பயணிகள் நிழற்குடையில்லாமல் வெயிலில் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். தரங்கம்பாடி வட்டம் செம்பனார்கோவில் ஒன்றியம் மிகப்பெரிய ஒன்றியமாகும். செம்பனார்கோவில் பகுதியை சுற்றியுள்ள கிராமங்களான பரசலூர், ஆறுபாதி, கீழையூர், மேமாத்தூர், மேலப்பாதி, மருதூர், மேலையூர் போன்ற 75க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருந்து வருகின்றன. இங்குள்ள பொதுமக்கள் வெளி ஊர்களுக்கோ தரங்கம்பாடி தாலுகா அலுவலகத்திற்கோ அல்லது நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகம் உட்பட்ட பல்துறை சார்ந்த அலுவலகத்திற்கு செல்ல வேண்டுமானால் பரசலூர் இணைப்பு சாலை உள்ளதால் கிராமங்களில் உள்ள பொதுமக்கள் பரசலூர் வந்துதான் செல்ல வேண்டும்.

இதுமட்டுமின்றி செம்பனார்கோவில் பகுதிகளில் ஒன்றிய அலுவலகம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம், ஆரம்ப சுகாதார நிலையம், இந்திய உணவு சேமிப்பு கிடங்கு வனவியல் அலுவலகம் தொலை தொடர்பு அலுவலகம், காவல் நிலையம் உட்பட பல்வேறு துறை அலுவலகங்கள் இங்கு இருப்பதால் பொதுமக்கள் பரசலூர் வந்து செல்ல வேண்டும் இப்படி முக்கியத்துவம் வாய்ந்த இந்த பரசலூர் ஊராட்சிக்கு இன்று வரை மயிலாடுதுறை பொறையார் மார்க்கத்திற்கு பயணிகள் செல்வதற்கு பயணிகள் நிழற்குடை இல்லாமல் வெயிலில் அவதிப்பட்டு வருகின்றனர்.

சுட்டெரிக்கும் வெயிலால் பொதுமக்கள் அருகில் இருக்கும் கடைகளில் ஒதுங்கினால் வியாபாரம் பாதிப்பதாக பொதுமக்களிடம் எரிச்சல் அடைகின்றனர்.
இப்பகுதிகளின் கிராமங்கள் அதிகமாக இருப்பதால் கர்ப்பிணி பெண்கள் ஆரம்ப சுகாதார நிலையம் செல்வதற்கு வெயிலில் துன்பத்திற்கு ஆளாகி உள்ளனர். இப்பொழுது கோடை காலம் என்பதால் வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் பலர் மயங்கி விழுகின்றனர். பொதுமக்கள் பேருந்தில் செல்வதற்கு பயணிகள் நிழற்குடை இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் பொதுமக்கள் பயனடையுமாறு மயிலாடுதுறை பொறையார் மார்கத்தின் பயணிகள் நிழற்குடை அமைக்க பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் எதிர்பார்கின்றனர்.

Tags : passengers ,public ,
× RELATED அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து; ஒருவர் பலி: 25க்கும் மேற்பட்டோர் காயம்!!