×

கைலாசநாதர் கோயிலில் ஏகாதச ருத்ர ஹோமம்

காரைக்கால், மே 10: காரைக்கால் சுந்தரம்பாள் சமேத கைலாசநாதர் கோவிலில் வரும் 16ம் தேதி 22ம் ஆண்டு அக்னி நட்சத்திர பிரதோஷ ஏகாதச ருத்ர ஹோமம் நடைபெறவுள்ளது. முன்னதாக, வரும் 16ம் தேதி காலை 5 மணிக்கு, மகா கணபதி ஹோமமும், 7 மணிக்கு சுவாமி அம்பாள் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை சங்கல்பம், 8 மணிக்கு ஏகாதச ருத்ரகலச பூஜைகளும் தொடர்ந்து, பகல் 12 மணிக்கு மகா ஸ்தாபன அபிஷேக, மகா தீபாராதனையும் நடைபெற உள்ளது. மாலை 4.30 மணிக்கு பிரதோஷ வழிபாடும் 6.30 மணிக்கு கைலாசநாதர் சுந்தரம்பாள் திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

Tags : Ekadasa ,Rudra Homam ,Kailasanathar temple ,
× RELATED பழநி அ.கலையம்புத்தூரில் உலக நலன் வேண்டி ருத்ர ஹோமம்