×

மயிலாடுதுறை அருகே மழை வேண்டி வருண யாகம்

மயிலாடுதுறை, மே 10:  உலக புகழ்பெற்ற திருமணஞ்சேரி உத்வாகநாத சுவாமி கோயிலில் மழை வேண்டி வருண யாகம் நடைபெற்றது. தமிழகத்தில் அதிகரித்து வரும் கோடை வெயிலால், குடிநீர் தட்டுப்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மழை பெய்து குடிநீர் தட்டுப்பாடு நீங்க வேண்டி, கோயில்களில் சிறப்பு வழிபாடு நடத்தும்படி தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டது. அதன்படி மயிலாடுதுறை அருகே உலக புகழ்பெற்ற திருமண வரம் அருளும் திருமணஞ்சேரி உத்வாக நாதசுவாமி கோயிலில், நந்தி பகவானை சுற்றி தொட்டி கட்டப்பட்டு, நந்திபகவான் கழுத்துவரை நீர் நிரப்பப்பட்டது. தொடர்ந்து கோயில் பிரகாரத்தில் யாகம் வளர்க்கப்பட்டு, வருண யாகம் நடத்தப் பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, மழை வேண்டி பிரார்த்தனை நடத்தினர்.

Tags : rainfall ,Vaanam Yagam ,Mayiladuthurai ,
× RELATED மயிலாடுதுறை மாவட்டத்தில் சந்தை...