×

புத்தூர் அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு 15ம் ேததி முதல் நடக்கிறது

கொள்ளிடம், மே 10: நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே புத்தூர் எம்.ஜி.ஆர் அரசு கலைக் கல்லூரி முதல்வர் லெட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புத்தூர் எம்.ஜி.ஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளங்கலை பட்ட வகுப்புக்கான 2019-20 ம் ஆண்டின் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வரும் 15ம் தேதி முதல் நடைபெறுகிறது. சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு 15ம் தேதியன்றும், அறிவியல் பிரிவுக்கான கலந்தாய்வு மே 16ம் தேதியும் வணிகவியல் பிரிவுக்கான கலந்தாய்வு 20ம் தேதியும் தமிழ் மற்றும் ஆங்கில பிரிவிற்கான கலந்தாய்வு 21ம் தேதியன்றும் கல்லூரி வளாகத்தில் காலை 9.30 மணி முதல் நடைபெறுகிறது. கலந்தாய்வில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவியர்கள் பிளஸ்2 மதிப்பெண் சான்றிதழ், பிளஸ்1 மதிப்பெண் சான்றிதழ், பள்ளிக்கல்வி மாற்று சான்றிதழ், சாதிச் சான்றிதழ் சிறப்பு ஒதுக்கீட்டிற்கான சான்றிதழ், மருத்துவ தகுதித் சான்றிதழ் ஆகிய அசல் சான்றிதழ்களுடன் நகல்கள் ஒன்று வீதமும், 3 புகைப்படங்களுடன் குறிப்பிட்டப்படி கல்விக்கட்டணமும் தவறாமல் கொண்டு வரவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags : Government Arts College ,Putur ,
× RELATED உரிய ஏற்பாடுகள் செய்யாததால் கடலூரில்...